For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிழிந்த ரூபாய்... கிறுக்கப்பட்ட ரூபாய் செல்லும்... ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரூபாய் நோட்டில் பெரெழுதப்பட்டிருந்தாலோ அல்லது அது கிழிந்திருந்தாலோ அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டுக்களின் மீது ஏதாவது கிறுக்கப்படிருந்தாலோ அல்லது கிழிந்திருந்தாலோ அந்த நோட்டு செல்லாது என தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கி அதை மறுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுக்களின் மீது ஏதாவது எழுதியிருந்தாலோ அல்லது ரூபாய் தாள்கள் கிழிந்திருந்தாலோ அவற்றை வங்கிகள் வாங்க மறுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

Soiled and scribbled rupees notes are exchangeable - Reserve Bank

மேலும் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் வங்கிகளுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஒருவர் 20 கிழிந்த நோட்டுக்களையோ அல்லது 5000 மதிப்புள்ள கிழிந்த, கிறுக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றினாலோ வங்கிகள் அவர்களிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலிக்கலாம் என 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகையால் கிழிந்த, கிறுக்கப்பட்ட நோட்டுகள் செல்லாது என்று வரும் புரளிகளை நம்பவேண்டாம் என ரிசர்வ் வங்கிக் கேட்டுக்கொண்டுள்ளது.

English summary
Soiled and scribbled rupees notes are exchangeable said RBI in a circular.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X