
இந்துக்களின் மக்கள் தொகை குறையும்! ‛சோலோகாமி’ திருமணத்தை கோவிலில் நடத்த பாஜக கடும் எதிர்ப்பு
காந்திநகர்: ‛சோலோகாமி' எனும் முறையில் ஜூன் 11ல் தன்னைத்தானே குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடு கோவிலில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ‛‛இந்த திருமணம் இந்து மதத்துக்கு எதிரானது. இது இந்துக்களின் மக்கள்தொகையை குறைக்கும். இதனால் எந்த கோவிலிலும் இத்தகைய திருமணம் நடத்த அனுமதிக்கமாட்டோம்'' என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் ‛சோலோகமி' எனும் திருமணம் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திருமணத்துக்கு மணமகன், மணமகள் தேவையில்லை.
இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் ‛சோலோகமி' எனும் திருமணம் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திருமணத்துக்கு மணமகன், மணமகள் தேவையில்லை.
‛சோலோகாமி’.. மணமகன் இன்றி தன்னையே திருமணம் செய்யும் இளம்பெண்! கோவாவுக்கு ஹனிமூனாம்!

குஜராத் இளம்பெண் திருமண முடிவு
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் ஷாமா பிந்து (வயது 24). இவர் சோசியாலஜி பட்டப்படிப்பை மடித்து தற்போது தனியார் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் இருவரும் இன்ஜினியர்கள். தந்தை தென்ஆப்பிரிக்காவில் உள்ள நிலையில் தாய் அகமதாபாத்தில் வசிக்கிறார். இந்நிலையில் ஷாமா பிந்து இவர் தான் ‛சோலோகமி' எனும் தன்னைத்தானே திருமணம் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளார்.

ஜூன் 11ல் திருமணம்
அதன்படி மணமகன் இன்றி ஜூன் 11ல் திருமணம் செய்ய உள்ளார். பொதுவாக எதிர்பாலினம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இத்தகைய திருமணம் செய்கின்றனர். மேலும் சுயகாதல், சுய அங்கீகாரம் ஆகியவற்றை வெளியுலகிற்கு கூறும் வகையில் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவாவுக்கு ஹனிமூன்
ஷாமா பிந்துவை பொறுத்தமட்டில் அவர் வழக்கமான திருமணத்தில் நாட்டமின்றி உள்ளார். இருப்பினும் மணப்பெண் கோலத்தில் மணமேடையில் அமர அவர் விரும்புகிறார். இதை நிறைவேற்றி கொள்ளதான் அவர் ‛சோலோகாமி' திருமணத்தை கையில் எடுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு அவர் கோவாவுக்கு ஹனிமூன் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

கோவிலில் திருமணம்...
இந்த திருமணத்தை அவர் ஹசாரியில் உள்ள ஹரிஹரேஷ்வர் மகாதேவ் கோவிலில் வெகுவிமரிசையாக நடத்த உள்ளார். இந்நிலையில் வழக்கமான இந்து முறைப்படியும் அவரது குடும்ப பாரம்பரிய முறைப்படியும் இந்த திருமணம் நடைபெற உள்ளது. புரோகிதர் மந்திரம் முழங்க அவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பாஜக கடும் எதிர்ப்பு
இந்நிலையில் தான் திருமணத்தை கோவிலில் நடத்த பாஜக சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றி வதோதரா பாஜக நகர துணை தலைவர் சுனிதா சுக்லா கூறியதாவது: ‛‛சோலோகாமி திருமணத்துக்கான இடத்தேர்வை எதிர்க்கிறோம். இந்த திருமணத்தை கோவிலில் நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் இது இந்து மதத்துக்கு எதிரானது. இத்தகைய திருமணத்தால் இந்துக்களின் மக்கள்தொகை குறையும். இந்த திருமண முடிவை எடுத்துள்ள பெண் மனநலம் சரியில்லாதவர்'' என தெரிவித்துள்ளார்.