For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோம்நாத் பாரதிக்கு மேலும் சிக்கல்: மற்றொரு உகாண்டா பெண் புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி மற்றொரு உகாண்டா பெண் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த 15-ம் தேதி இரவு மாளவியா நகரின் கிர்கி கிராமப் பகுதியில் நைஜீரிய மற்றும் உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் கள் போதை மருந்து வியாபாரத்துடன் விபச்சாரமும் செய்வதாக புகார் வந்ததை அடுத்து, சோம்நாத் பாரதி அங்கு நேரில் சென்றார்.

Somnath Bharti raid: Another Ugandan woman moves court for FIR

தன்னுடன் வந்த காவல்துறையினரிடம் அங்கு சோதனை நடத்தும்படி கூறியுள்ளார். ஆனால் ஆதாரங்கள் இல்லாமல் ஆய்வு செய்ய முடியாது என அவர்கள் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் முன்னிலையிலேயே காவல்துறையினருடன் சட்ட அமைச்சர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கிருந்த நைஜீரிய பெண்கள் நால்வரை மிரட்டிய சோம்நாத், கட்டாயப்படுத்தி அவர்களது சிறுநீர் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாகவும், இதன் முடிவை காண அவர் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நேரில் சென்றதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி தலைமையிலான குழுவினர் நள்ளிரவில் தங்களை வீடுபுகுந்து தாக்கிய தாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஆப்பிரிக்க பெண்கள் சிலர் புகார் கூறியுள்ளனர்.

இதனால் கேஜரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சோம் நாத் பாரதியை அமைச்சரவையி லிருந்து நீக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலி யுறுத்தி உள்ளனர்.

நைஜீரியாவைச் சேர்ந்த 3 பெண்களும் உகாண்டாவைச் சேர்ந்த 2 பெண்களும் மாஜிஸ் திரேட் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி தனது வாக்குமூலத் தைப் பதிவு செய்தனர்.

கடந்த 15-ம் தேதி தங்களை வீடு புகுந்து தாக்கியதாகவும், இன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் அவர்கள் தங்களது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இந்த வாக்குமூலம் அடங்கிய ஆவணம் சீலிட்ட உரையில் வைத்து டெல்லி போலீஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை யின்போதுதான் இது திறக்கப் படும்.

கொலை மிரட்டல்

இதுகுறித்து புகார் கொடுத்த வர்களில் ஒருவர் கூறுகையில், "கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் சோம்நாத் பாரதி தலைமைமையிலான குழுவினர் கம்புகளுடன் வீடுபுகுந்து எங்களை தாக்கினர். நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்" என்றார்.

எங்களை தாக்கியபோது உடனிருந்த ஒருவர், சம்பவம் நிகழ்ந்த மறுநாள் தொலைக்காட்சி யில் தோன்றினார். அவர் பெயர் சோம்நாத் பாரதி என தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தான் அவரது பெயரைக் குறிப் பிட்டுள்ளதாக அவர் கூறினார்.

எப்.ஐ.ஆர் பதிவு

இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் புகார் கொடுத்த ஆப்பிரிக்க பெண்ணை அரசுத் தரப்பு சாட்சியாக போலீஸார் சேர்த்துள்ளனர்.

பெண்கள் அமைப்பு

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையமும் ஆப்பிரிக்க பெண்கள் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங் கூறுகையில், " இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் சோம்நாத் பாரதிக்கு சம்மன் அனுப்பியபோதும் அவர் ஆஜராக வில்லை. மேலும் ஒரு சம்மன் அனுப்பப்படும். அப்போதும் அவர் ஆஜராகாவிட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு துணை நிலை ஆளுநருக்கும் டெல்லி காவல் துணை ஆணைய ருக்கும் கடிதம் எழுத உள்ளோம்" என்றார்.

கிரண்பேடி கண்டனம்

அண்ணா ஹசாரே ஆதரவா ளரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோம்நாத் பாரதி மீது நடவடிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி மற்றும் ஏர் டெக்கான் நிறுவனரும், ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் சேர்ந்தவருமான கேப்டன் கோபிநாத் ஆகியோரும் சோம்நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கெஜ்ரிவால் சந்திப்பு

சோம்நாத் பாரதியை பதவிவிலகச் செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் மற்றொரு பெண் சோம்நாத் பாரதிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனிடையே முதல்வர் கெஜ்ரிவால் இன்று மதியம் துணைநிலை ஆளுநரை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து சோம்நாத் பாரதி பதவி பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது வழக்கமான சந்திப்புதான் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
Trouble seems to be growing for Delhi Law Minister Somnath Bharti as another Ugandan woman has moved court seeking an FIR against men who misbehaved with her during the raid in the Khirki Extension area. At the moment, she has not named Bharti, but if she identifies Bharti as one of the men who misbehaved with her, trouble may grow for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X