For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாயு புயல் அச்சுறுத்தினாலும் ஆரத்தி வழிபாட்டுக்காக திறந்தே வைக்கப்பட்டிருக்கும் சோம்நாத் ஆலயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Vayu: வாயு புயல்.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை..சென்னைக்கு எப்படி?- வீடியோ

    சோம்நாத்: அரபிக் கடலிருந்து நகர்ந்து வரும் அதி தீவிர புயல் தாக்கினாலும் கூட குஜராத்தின் சோம்நாத் ஆலயத்தை மூடுவதாக இல்லை என குஜராத் அமைச்சர் பூபேந்திரசிங் சுதசமா கூறியுள்ளார். பக்தர்களும் இன்று காலை முதல் சோம்நாத் ஆலயத்தில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    அதிதீவிர வாயு புயலானது குஜராத்தின் சவுராஷ்ட்ரா மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரை பகுதிகளை மணிக்கு 150- முதல் 170 கி.மீ வேகத்தில் தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    Somnath temple cant shut, says Gujarat Minister

    குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான பாவ்நகர் கோலியாக், ஜூனாகத், சோம்நாத், போர்பந்தர், டையூ, துவாராக உள்ளிட்டவை அனைத்தும் மேற்கு கடற்கரையில்தான் அம்மைந்துள்ளன. இதனால் இந்த கடலோர கிராமங்களில் இருந்து பல லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்ப்பட்டுள்ளனர்.

    தண்ணீர் பஞ்சத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.. சென்னையில் தீயை அணைக்க நீர் இல்லாமல் தவித்த வீரர்கள் தண்ணீர் பஞ்சத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.. சென்னையில் தீயை அணைக்க நீர் இல்லாமல் தவித்த வீரர்கள்

    புயல் தாக்கக் கூடிய பகுதிகளில் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் புயல் பாதிக்கும் பகுதிகளில் புகழ்பெற்ற ஆலயங்கள் எதுவும் மூடப்படவில்லை. அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Somnath temple cant shut, says Gujarat Minister

    இதனையும் மீறி இன்று காலை குஜராத்தின் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தினர். சோம்நாத் ஆலயத்தின் முன்பகுதியில் கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஆனாலும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த குஜராத் அமைச்சர் பூபேந்தர்சிங் சுதசமா, சோம்நாத் கோவிலில் நாள்தோறும் ஆரத்தி வழிபாடு நடைபெறும். அதை நிறுத்துவதற்கு நாம் யார்?

    அதனால்தான் கோவிலை திறந்து வைத்துள்ளோம். பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளோம். இயற்கையாகவே ஆரத்தி வழிபாட்டை நிறுத்தினால் நாம் என்ன செய்ய முடியும்?என்றார்

    English summary
    Devotees of Lord Somnath offered prayers at the Somnath Temple on Thursday morning overlooking the red alert for cyclone Vayu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X