For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. என்டிஆர் காலத்திலும் இது நடந்ததில்லை!

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திர வரலாற்றிலேயே முதல்முறையாக தந்தையை போல் மகனும் முதல்வராகியுள்ளார். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் ஆரம்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் போல் உருவெடுத்த என்டி ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக 1983-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. அவர் மூன்று முறை முதல்வராக பணியாற்றினார். என்டிஆரின் காலத்துக்கு பிறகு அந்த கட்சியை அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு எடுத்து நடத்தினார்.

திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!திருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்!

2009-ஆம் ஆண்டு

2009-ஆம் ஆண்டு

பின்னர் 1995-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையில் முதல்முறையாக தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து 2004-இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அவர் முதல்வராக 2009-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

ராஜசேகர ரெட்டி

ராஜசேகர ரெட்டி

மக்களின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர இரண்டாக பிரியும் வரை முதல்வராகவே இருந்தார். இந்த நிலையில் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குவதற்காக அவரது சகோதரரை லோக்சபா தொகுதியிலிருந்து விலகுமாறு ராஜசேகர ரெட்டி கேட்டு கொண்டார்.

ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!

விமான விபத்தில்

விமான விபத்தில்

ஆனால் சோனியா காந்தியோ 2009-ஆம் ஆண்டு வரை பொறுமை காக்குமாறு ராஜசேகர ரெட்டியிடம் கூறினார். இதையடுத்து 2009-ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து சில மாதங்களிலேயே ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வராக அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை தேர்வு செய்யுமாறு காங்கிரஸிடம் ராஜசேகர ரெட்டியின் விசுவாசிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் காங்கிரஸோ ரோசய்யாவை முதல்வராக தேர்வு செய்தது.

16 மாதங்கள்

16 மாதங்கள்

இதைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வெளியே வந்த ஜெகன்மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து ரெட்டி ஊழல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் 16 மாதங்கள் கழித்து 2013-இல் ஜாமீனில் வெளியே வந்தார்.

மோதல்

மோதல்

ஆந்திர மாநிலம் கடந்த 2014-ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. அதிலிருந்து தெலுங்கானா என்ற மாநிலம் உதயமானது. இதைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்தது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் பாரம்பரியமான தெலுங்கு தேசம் கட்சியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மோதியது.

முதல்வர்

முதல்வர்

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை 3-இடத்துக்கு தள்ளிய ஜெகன் மோகன் ரெட்டி 67 எம்எல்ஏக்களை பெற்றார். புதிதாக தொடங்கப்பட்ட கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்தனர். எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.

ஒய்எஸ்ஆர் கட்சி

ஒய்எஸ்ஆர் கட்சி

கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதன் விளைவு 2019-இல் நடந்த சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதுபோல் லோக்சபா தேர்தலிலும் ஒய்எஸ்ஆரின் கட்சி நல்ல வெற்றியை பெற்றது.

45 ஆண்டு அனுபவம்

45 ஆண்டு அனுபவம்

45 வயதான ஜெகன்மோகன் ரெட்டியிடம் அவர் வயதை அனுபவமாக பெற்ற சந்திரபாபு நாயுடு கடும் தோல்வி பெற்றார். அத்தோடு மட்டுமல்லாமல் 2014-ஆம் ஆண்டு அசம்பிளி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள விட 2019-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு குறைவாகவே பெற்றுள்ளார். ஆந்திர வரலாற்றில் முதல்முறையாக தந்தையை போல் மகனும் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளது பெரும் சாதனையாகும்.

English summary
Son also become a Chief Minister in Andhra Pradesh Histry after his father Y.S. Rajasekara Reddy died in plane crash in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X