For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாபெரும் வெற்றி: ரேபரேலியில் 'ஹாட்ரிக்' அடித்த சோனியா காந்தி

By Siva
|

லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதமாக இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.

Sonia Gandhi wins in Rae Bareli by over 3.52 lakh votes, defeating Ajay Agarwal of BJP

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான அஜய் அகர்வாலை 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

சோனியா முதன்முதலாக கடந்த 2004ம் ஆண்டு தான் ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக சோனியா ரேபரேலியில் வெற்றி பெற்றுள்ளார்.

2004ம் ஆண்டுக்கு முன்பு அவர் அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress president Sonia Gandhi has won in Rae Bareli continuously for the the third time. She has defeated her BJP rival Ajay Agarwal by 3.52 lakh votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X