For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5000 அபராதம்! நாடு முழுவதும் விரைவில் அமல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பொது இடங்களில் சிறுநீர் கழித்தால், மலம் கழித்தால் ரூ. 5000 அபராதம் விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்காக தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இந்தத் திட்டம் இன்னும் நகரங்களில் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் உள்ளது.

Soon, littering or urinating in public may invite a fine of Rs 5,000

இதையடுத்து இந்த திட்டத்தை உறுதியாக அமல்படுத்தும் எண்ணத்தில், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்க்ளுக்கு ரூ. 200 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்க வேண்டும். முதலில் இந்த திட்டத்தை வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நகரின் ஒரு வார்டில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டு இறுதியில் 10-15 நகரங்களில் அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த வேண்டும், பின்னர் அனைத்து நகரங்களிலும், அனைத்து வார்டுகளிலும் 2018, ஏப்ரல் 30ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகரின் அனைத்து இடங்களிலும் போதிய கழிப்பறை வசதிகள், குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். வீட்டுக்கே சென்று குப்பைகளை சேகரித்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், முறையான வசதிகளை செய்த பின்னரே இந்த அபராதத்தை விதிக்க வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

English summary
The Centre has directed states to start levying fines for littering, open defecation and public urination by April 30 as the NDA government’s flagship Swachh Bharat Mission has failed to have the desired effect in urban areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X