For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடை காலத்தில் குதூகலமாக பயணிக்க 78 வாராந்திர சிறப்பு ரயில்கள்... தென்னக மத்திய ரயில்வே

கோடைக் காலத்தில் குதூகலமாக பயணிக்க 78 வாராந்திர சிறப்பு ரயில் சேவைகளை தென்னக மத்திய ரயில்வே இயக்குகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி : கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க வாராந்திர சிறப்பு ரயில் சேவைகளாக 78 சேவைகளை தென்னக ரயில்வே வழங்குகிறது.

கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா செல்வதற்கும் மக்கள் பெரிதும் தேர்வு செய்வது ரயில் சேவைகளைத்தான். டிக்கெட் கட்டணமும் குறைவு, அலுப்பு தெரியாமல் பயணம் இவைகள்தான் ரயில் நிலையங்களை மக்கள் மொய்க்க வைக்கிறது.

South Central Railway to run 78 Weekly Special Trains Between Various Destinations

இதோடு தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரித்து விட்டதால் இந்த கோடை விடுமுறைக்கு மக்கள் அதிகளவில் ரயில்களையே நாடுவர். சாதாரணமாகவே கூட்ட நெரிசலில் மூட்டை முடிச்சுகளுடன் முண்டியடித்து கொண்டு ஏறவேண்டும். தற்போது இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மேலும் சில ரயில்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று தென்னக ரயில்வேயிடம் கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில் 78 வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டிருக்கிறது. புதுவை- சந்திரகசி (கொல்கத்தா), சென்னை சென்ட்ரல் - சந்திரகசி (கொல்கத்தா) மற்றும் சந்திரகசி- சென்னை சென்ட்ரல் என தலா 26 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இது குறித்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

English summary
In order to clear extra rush of passengers during summer season, 78 weekly special fare special trains between Puducherry –Santragachi (Kolkata), Chennai Central – Santragachi and Santragachi – Chennai Central. Each vias has 26 services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X