For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இவிங்க" வேற மாதிரி.. பாஜக வயிற்றில் "தென்னகத்து" புளியைக் கரைத்த ஏபிபி சர்வே!

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர் கட்சிகளின் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு - ஏபிபி சர்வே தகவல்

    சென்னை: ஏபிபி சர்வேயில் எல்லா மாநிலங்களிலும் பாஜக, பாஜக என்று வந்த நிலையில் தென் மாநிலங்களுக்கு வந்தபோது அப்படியே தலைகீழாக மாறிப் போய் காணப்பட்டது சர்வே முடிவுகள்.

    டெல்லியில் அத்தனையும் பாஜகவுக்கே, வட கிழக்கைக் கைப்பற்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி, வடக்கிலும் பாஜக அலைதான். ஆனால் தென் மாநிலங்களில் அப்படியே மாறிப் போய் விட்டது கணிப்பு.

    மொத்தம் உள்ள 129 தொகுதிகளில் வெறும் 21 தொகுதிகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு. இதில் பாஜகவுக்கு எத்தனை கிடைக்கும் என்பது தெரியவில்லை. கூட்டணியாகவே 21 தொகுதிகள்தான்.

    மாநிலக் கட்சிகள் ஆதிக்கம்

    தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் ராஜ்ஜியம் படு ஸ்டிராங்காக இருப்பதையே இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது. திமுக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்டவை லம்ப்பாக தொகுதிகளை அள்ளப் போவதையே இந்த கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.

    காவிக்கு எதிரான திராவிடம்

    காவிக்கு எதிரான திராவிடம்

    அதை விட முக்கியமாக திராவிடத்தையும், அதன் அடையாளத்தையும் தகர்க்க முயன்று வரும் பாஜகவுக்கு, அது அத்தனை எளிதல்ல என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும் என்றே தெரிகிறது. திராவிடம் தகர்க்க இயலாதது என்பதையும் இந்தக் கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.

    வலுவான திமுக கூட்டணி அமைந்தால்

    வலுவான திமுக கூட்டணி அமைந்தால்

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக அமையுமானால் 39 தொகுதிகளில் முக்கால்வாசியை எளிதாக அவர்களால் கைப்பற்ற முடியும். இடையில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ரஜினி கட்சி என்ட்ரி கொடுக்கலாம். கமல் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. எப்படி இருப்பினும் திமுக தெளிவாக செயல்படும் பட்சத்தில் ஜெயம் அவர்களுக்கே போகும் வாய்ப்பு அதிகம்.

    கர்நாடகாவிலும் சிக்கலே

    கர்நாடகாவிலும் சிக்கலே

    அதை விட முக்கியமாக கர்நாடகத்தில் பாஜகவுக்கு பெரும் அடி விழும் என்கிறார்கள். அங்கு மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதை உடைக்க பாஜக முயற்சிப்பதாக சந்தேகங்கள் உள்ளன. ஆனால் அதை முறியடிக்கும் வகையில் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் நீக்குப் போக்காக நடந்து கொள்கின்றனர். லோக்சபா தேர்தலில் இன்னும் விட்டுக் கொடுத்து இவர்கள் செயல்பட்டால், பாஜக நிலைமை பரிதாபமாகும் என்கிறார்கள்.

    கேரளாவில்

    கேரளாவில்

    கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நல்ல செல்வாக்குடன் உள்ளது. அங்கு பாஜகவுக்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. சபரிமலை விவகாரத்தை வைத்து அங்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பாஜக முனையலாம்.

    பாஜகவுக்கு எதிர்ப்பு அலை

    பாஜகவுக்கு எதிர்ப்பு அலை

    மொத்தத்தில், பாஜகவுக்கு எதிரான அலை தென் மாநிலங்களில் வலுவாக இருப்பதையே இது மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் போல தென் மாநிலங்கள் கிடையாது, இது வேற மாதிரி என்பதை இந்த கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டுவதை உணரலாம்.

    English summary
    South is always different from others, ABP C Voter Mood of the Nation survey has proved it again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X