For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையில் பேய் மழை.. ரயில், விமான சேவை தாமதம்.. மக்களுக்கு எச்சரிக்கை

மும்பையில் தென் மேற்கு பருவக்காற்றால் கனமழை பெய்து வருகிறது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பையை மிரட்டும் மழை... மக்களுக்கு எச்சரிக்கை

    மும்பை: தென் மேற்கு பருவமழை காரணமாக மும்பை உள்ளிட்ட தெற்கு கொங்கன், மகாராஷ்ட்ரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆராய்ச்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    மும்பை, தெற்கு விதர்பா மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல், வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து இருந்தது போல தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது மழையின் நிலவரம் தீவிரம் அடைந்துள்ளது.

    Southwest Monsoon hits Mumbai

    மும்பையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் மக்கள் வீடுகளை விட்டு இன்றும், நாளையும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர் மழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவையும் மெதுவாகவே இயக்கப்பட்டு வருகிறது. இன்றும், நாளையும் மழை மிதமிஞ்சிய அளவில் பெய்யும். 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மேலும், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் தாதர், பரேல்,பாந்த்ரா, போரிவலி ,அந்தேரி உள்பட நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

    மோசமான வானிலை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இரண்டு நாட்களில் சராசரியாக 37 மி.மீ மழை பெய்துள்ளது.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English summary
    Southwest Monsoon hits Mumbai. Train and Flight Services Delayed and Corporation made necessary Arrangements.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X