For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்காரம்: பெண்களையும் தூக்கிலிட வேண்டும்... இது முலாயம் கட்சியின் அபு ஆஸ்மி

Google Oneindia Tamil News

மும்பை: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பிரச்சினையில் சிக்கியுள்ளார் மற்றொரு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி.

நேற்று உத்தரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மொரதாபாத்தில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்" என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது.

Now, Abu Azmi says women having sex outside marriage, rape victims should be hanged

முலாயமின் கருத்திற்கு டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பலாத்காரம் தொடர்பாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மற்றொரு சமாஜ்வாடி கட்சித் தலைவர்.

இன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான அபு ஆஸ்மி. அப்போது அவர் பேசியதாவது:

ஆண்களுக்கு மட்டும் தண்டனையா...

பாலியல் பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இங்கு பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கும் மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு சாதகமாக சட்டம்...

இந்தியாவில் சம்மதத்துடன் செக்ஸ் வைத்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்சனையாகிவிடுகிறது. இது போன்ற பல வழக்குகளை நாம் காண்கிறோம். இதில் பெண்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படுவதில்லை.

பெண்கள், சிலர் தங்களை தொட்டால் புகார் அளிக்கின்றனர். சிலவேளையில் தொடாவிட்டால் கூட புகார் அளிக்கின்றனர். பிறகு இது பிரச்சினையாக எழுகிறது.

பலாத்காரம் பெண்ணின் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எவ்வாறு நடந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் இஸ்லாம் சொல்கிறது.

ஏதாவது ஒரு பெண் திருமணம் ஆகியோ அல்லது ஆகமலோ வேற்று ஆணுடன் உறவு வைத்தால் அப்பெண் தூக்கிலிட வேண்டும். இருவருமே துக்கிலிடப்பட வேண்டும் என்றார்.

சர்ச்சை...

லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தொடர்ந்து சமாஜ்வாடிக் கட்சித் தலைவர்கள் இவ்வாறு பலாத்காரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
On Thursday, Samajwadi Party chief Mulayam Singh Yadav shocked everyone by defending rapists, saying they should not be hanged for committing a 'mistake'. On Friday, his party representative in Maharashtra, Abu Azmi, went a step further and said victims in rape cases should also be punished.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X