For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம குளிருப்பா.. ஒரு பக்கம் ஹீட்டர்.. உடலை சுற்றி ஸ்வெட்டர்.. சொகுசாக தூங்கும் உராங்குட்டான்கள்!

குளிரில் நடுங்கும் விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    செம குளிரு , சொகுசாக தூங்கும் உராங்குட்டான்கள்!

    புவனேஸ்வர்: ஒரு பக்கம் அனல் வீசும் ஹீட்டர், இன்னொரு பக்கம் இதமான கம்பளிகள் என சொகுசாக தூங்கி வழிகிறது உராங்குட்டான் குரங்குகள்!!

    வட இந்தியா முழுவதும் கடுங்குளிர் வீசி வந்தாலும், ஒடிசாவில் எக்கச்சக்க குளிரில் மக்கள் நடுங்கி வருகிறார்கள். மக்களுக்கே இந்த கதி என்றால் விலங்குகளும் குளிர் தாங்க முடியாமல் படாத பாடு பட்டு வருகின்றன.

    குறிப்பாக, ஒடிசா புவனேஸ்வர் நகரில் நந்தன்கனன் என்ற விலங்கியல் பூங்கா ரொம்ப ஃபேமஸ் ஆனது. கிட்டத்தட்ட 425 ஹெக்டர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. வித விதமான விலங்குகள், வகை வகையான ஊர்வன, கலர் கலரான பறவைகள் என ஒன்றுவிடாமல் இந்த பூங்காவில் உள்ளன.

    புது ஐடியா

    புது ஐடியா

    இதனை வெளிநாட்டுக்காரர்கள் இங்கு வந்தால் தவறாமல் சென்று விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இந்த விலங்குகள் எல்லாம் இப்போது குளிரில் நடுங்கி கொண்டு திரிகின்றன. இதனால் விலங்குகளை நடுங்கும் குளிரிலிருந்து தப்பிக்க வைக்க பூங்கா நிர்வாகம் நிறைய நிறைய ஐடியாக்களை செய்து வருகிறது.

    ஸ்பெஷல் ஏற்பாடு

    ஸ்பெஷல் ஏற்பாடு

    அதன்படி முதல்வேலையாக, எல்லா விலங்குகளுக்கும் போர்வை, ஹீட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பிறகு தனித்தனியாக ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு செய்துள்ளது.

    பாம்புக்கு பல்பு

    பாம்புக்கு பல்பு

    பைத்தான் வகை மலை பாம்புகளுக்கு அதன் ரூம் முழுவதும் வைக்கோல்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. வைக்கோல்கள் பொதுவாக சூடு தரக்கூடியது என்பதால் பாம்புக்கு கொஞ்சம் இதமாக இருக்கும். அதேபோன்ற அதிக விஷம் கொண்ட ராஜநாகம் பாம்புக்கு நிறைய பல்புகள் அதன் ரூமில் பொருத்தப்பட்டுள்ளது. பல்புகள் சூட்டினை பரப்பும் என்பதால், இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஹீட்டர் வசதி

    ஹீட்டர் வசதி

    பிறகு குரங்குகளுக்கு பிளைவுட், ஹீட்டர் வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக உராங்குட்டான் குரங்குகளுக்கு கனமான பெட்ஷீட்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. பெரிய பெரிய விலங்குகளுக்கே இப்படி என்றால், சின்னஞ்சிறு பறவைகளுக்கு சிறப்பு வலை கூண்டுகள் ரெடியாக வைக்கப்பட்டு விட்டது.

    விழிக்கின்றன

    விழிக்கின்றன

    குளிரில் நடுங்கி அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த இந்த விலங்குகள் எல்லாம் இழுத்து போர்த்தி கொண்டு தகதகவென மின்னும் விளக்குகளையும், ஹீட்டர்களையும் பார்த்து விழித்து கொண்டிருக்கின்றன.

    English summary
    In Odisha Zoo, Animals are Getting Special Treatment for escaping This Winter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X