For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் 10 தீவிரவாதிகளை வீழ்த்திய ராணுவ கமாண்டோ வீரமரணம்

Google Oneindia Tamil News

ஜம்மு: 11 நாட்களில் 10 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவத்தின் சிறப்புப் படை கமாண்டோ தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

jawan

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியபோது அவர்களை எதிர்கொண்ட சிறப்புப் படை கமாண்டோ வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் சிறப்பு கமாண்டோப்படைப் பிரிவு வீரர் லான்ஸ் நாயக் மோகன்நாத் கோஸ்வாமி, காஷ்மீரில் பயங்கரவாத தடுப்புப்பிரிவில் பணியாற்றினார். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு கடந்த 11 நாட்களில் 10 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றார்.

மேலும், உதாம்பூரில் நடந்த வேட்டையில் முகமது நவீத் யாகூப் என்ற தீவிரவாதியை உயிருடன் பிடிக்க இவர் காரணமாக இருந்தார். தொடர்ந்து ஹந்த்வாரா என்ற இடத்தில் நடந்த சண்டையின் போது அவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். இதனை ராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

வீரமரணம் அடைந்த மோகன்நாத் என்ற வீரர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் இறுதி மரியாதைக்காக அவரது சொந்த கிராமமான இந்திரா நகருக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வீரர் மோகன்நாத்துக்கு மனைவி மற்றும் 7வயது மகள் உள்ளனர்.

English summary
Lance Naik Mohan Nath Goswami, a Special Forces Commando of the Army who laid down his life while battling militants in Handwara on Thursday, had eliminated 10 militants in a short span of 11 days before making the supreme sacrifice in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X