For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை வீசம்மா... கை வீசு.. ஸ்பைஸ் ஜெட் போலாம் கை வீசு... டிக்கெட்டில் டிஸ்கவுண்ட் தரும் ஸ்பைஸ்ஜெட்!

Google Oneindia Tamil News

டெல்லி: லக்கேஜூகள் இன்றி வரும் பயணிகளுக்கு கட்டண சலுகை அறிவித்துள்ளது ஸ்பைஸ்ஜெட்.

தற்போது விமான பயணிகள் 15 கிலோ வரை லக்கேஜூகளை கட்டணமின்றி விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், இதை ரத்து செய்துவிட்டு பயணிகள் கொண்டு செல்லும் ஒவ்வொரு கிலோவுக்கும் கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று சில தனியார் விமான நிறுவனங்கள் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

SpiceJet offers discount for 'Zero bag' passengers

பின்னர், லக்கேஜூகளுக்கு கட்டணம் வசூலிக்கவேண்டும் என்கிற பரிந்துரையை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு கொண்டு சென்றது. ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில், பயணிகளைக் கவரும் வகையில் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனம். அதாவது, கைகளில் லக்கேஜ் எதுவும் கொண்டு வராமல் ஹாயாக வரும் பயணிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்பது தான் அது.

ஒருவேளை லக்கேஜ் எதுவும் எடுத்து வரப்போவதில்லை எனக் கூறி கட்டண சலுகை பெற்று விட்டு, இறுதி நேரத்தில் லக்கேஜ் எடுத்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ லக்கேஜுக்கு ரூ. 500-ம், 15 கிலோ லக்கேஜூக்கு ரூ. 750-ம் பணம் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Despite the government nixing the budget carriers' proposal to charge for check-in baggage, SpiceJet on Tuesday offered a discount for "Zero bag" passengers on its domestic flights. The airline, however, said that those who book tickets at discounted fares but later decide to check-in luggage would have to pay a fee of Rs 500 for up to 10 kg and Rs 750 for up to 15 kg baggage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X