5 பேருக்கு "துரோணாச்சாரியார்" விருது
டெல்லி: இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் துரோணாச்சார்யா விருது வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்தது. 5 பயிற்சியாளர்கள் இந்த விருதை பெறுகிறார்கள்.

துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்கள்:
1. அணுப்சிங் (மல்யுத்தம்)
2. சுவாந்திரா ராஜ்சிங் (குத்துச்சண்டை)
3. நிகார் அமீன் (நீச்சல்)
4. ஹர்பன்ஸ் சிங் (தடகளம்)
5. நாவல்சிங் (மாற்றுத்திறனாளி போட்டிகள்)
இதே போல தயான்சந்த் விருதுக்குரியவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஆக்கி வீரர் ரோமியோ ஜேம்ஸ், டி.பி.பி. நாயர் (கைப்பந்து), எஸ்.பி.மிஸ்ரா (டென்னிஸ்) ஆகியோர் இந்த விருதை பெறுகின்றனர். வருகிற 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்குகிறார்.