For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராகலாம்: அன்பழகன் மனு டிஸ்மிஸ்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராக அனுமதித்த கர்நாடக உயர் நீதிமன்ற பெஞ்ச், திமுகவின் அன்பழகன் மனுவை தள்ளுபடி செய்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது.

SPP appointment: Anbazhagan asked to move SC…

சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டுகிறது திமுகவின் அன்பழகன் தரப்பு. மேலும், பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். எனவே பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

நீதிபதிகள் குமார், வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. ஜெயலலிதா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் ஆஜராவது சட்டவிரோதம் என க. அன்பழகன் தரப்பு வாதம் செய்தது. அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வி.நாகேஷ் வாதிட்டார். விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே பவானி ஆஜராக கர்நாடக அரசு அனுமதித்திருந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. வழக்கில் அரசு தரப்பில் பவானி ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நாகேஷ் வாதத்தை முன்வைத்தார்.

கர்நாடக அரசிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டது ஹைகோர்ட். கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் பதில் தாக்கல் செய்தார். அதில், பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை என்று கூறியிருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.

அதன்படி மாலை 4.15 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், ஏ-1 மற்றும் ஏ-2 குற்றவாளிகள் (ஜெயலலிதா மற்றும் சசிகலா) தரப்பு வாதங்கள் ஹைகோர்ட்டில் நிறைவடைந்துவிட்டன.

வழக்கு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த நேரத்தில் அரசு வக்கீலை மாற்றம் செய்வது வழக்கின் தன்மையை பாதித்துவிடும்.

ஏற்கனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே வழக்கில் தலையிட்டு அதை தாமதப்படுத்த ஹைகோர்ட் விரும்பவில்லை.

பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமித்த விவகாரத்தில், கர்நாடக அரசு, மனுதாரர் (அன்பழகன்) ஆகிய தரப்புக்குமே அதிருப்தியுள்ளது தெரிகிறது. எனவே அவர்கள் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறி, அன்பழகன் மனுவை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே வழக்கில் 3வது நபராக தங்களை சேர்க்க வேண்டும் என்று ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் அன்பழகன் தாக்கல் செய்த மனுவும் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The petition filed by Anbazhagan which seeks Bhavanisingh's removal from Jayalalitha asset case was dismissed by Karnataka high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X