For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டசபையில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். சிவகுமார் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசினார்.

Spurt in HIV cases in Kerala

அப்போது அவர் கூறுகையில்,

2004-2005 நிதியாண்டு முதல் பார்த்தால் அப்போது மாநிலத்தில் 440 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,766 ஆக அதிகரித்துள்ளது. 2011-2012ம் நிதியாண்டில் புதிதாக 1, 680 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் மாத்ததுடன் முடிந்த நிதியாண்டில் மேலும் 1,177 பேர்
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

தற்போது மாநிலத்தில் 17 ஆயிரத்து 593 பேர் ஹெச்.வி.ஐயால் பாதிக்கப்படுள்ளனர். 8 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்திலேயே பாலக்காடு மாவட்டத்தில் தான் அதிகமாக 1, 381 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். திருவனந்தபுரத்தில் 898 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

English summary
Kerala has seen an increase in the number of HIV positive cases, a minister said on Tuesday. Health Minister V.S.Sivakumar informed the Kerala assembly that in the past decade, the last fiscal saw the highest increase of fresh HIV positive cases in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X