For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேசான் நிறுவனர் பெசோஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்.. இந்தியாவில் ஸ்பைவேர்கள் செயல்படுவது எப்படி?

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் மிகப்பெரிய செல்வந்தரான ஜெஃப் பெசோஸ் பயன்படுத்திய ஐபோனில் இருந்து தகவல் திருடப்பட்டதாக கூறப்படும் நிலையில், உளவு கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற மென்பொருளை உருவாக்குபவர்கள் விரைவாக வளர்ந்து வருவதும், இந்த ரகசிய குடிசை தொழில் அதிதீவிரமாக வளர்ந்து வருவது அண்மைக்காலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவிலும் அதிதீவிரமாக இந்த ஹேக்கர்கள் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் பலரது தரவுகளை திருடுவது, அந்தரங்க தகவல்களை சேகரித்து அவர்களை மிரட்டுவது , பெரிய பிரபலங்கள் என்றால் அவர்களை ரகசியமாக கண்காணிப்பது, அவர்களின் போன்களை ஒட்டுக்கேட்பது, அவர்களின் வங்கிகணக்கு உள்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை திருடுவது போன்ற திருட்டுத்தனங்களை வெற்றிகரமாக செய்து பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது.

NSO குழு மற்றும் ஹேக்கிங் குழு ஆகியவை மிகவும் பிரபலமான கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஸ்பைவேர் மூலம் இலக்கு வைத்து மொபைல் போன்கள் மற்றும் கணினிகளை இரகசியமாக ஹேக் செய்து அவற்றின் தகவல்களை இவர்கள் விற்றுள்ளனர்.

விடமால் துரத்தும் ஈரான்.. சீறிப்பாய்ந்த 3 ஏவுகணை.. அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்.. பகீர்! விடமால் துரத்தும் ஈரான்.. சீறிப்பாய்ந்த 3 ஏவுகணை.. அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்.. பகீர்!

கேமராவை பயன்படுத்தலாம்

கேமராவை பயன்படுத்தலாம்

இதை வைத்து அழைப்புகளைப் பதிவுசெய்யலாம். மெசேஸ்களை டவுன்லோடு செய்ய முடியும். சாதனத்தின் உள்ளடிக்கிய கேமராவைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்கலாம் மற்றும் அதன் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி ஆடியோவைப் பதிவு செய்யலாம். இப்படி பல திருட்டுத்தனங்களை செய்துவிட முடியும்.

வேகமாக வளர்ந்தது

வேகமாக வளர்ந்தது

ஆனால் இந்த நிறுவனங்களை தாண்டி இன்னும் பல நிறுவனங்கள் இந்த திருட்டுத்தனங்களை தொழிலாக செய்து வருகின்றன. அவற்றில் சில பொதுமக்களுக்கு நன்கு தெரியாதவை. உலகெங்கிலும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை விற்பனை செய்கின்றன. இது ஒரு தொழில்துறையின் ஒரு பகுதியாக நன்கு புரிந்து கொள்ளப்படாதது மற்றும் பெரும்பாலும் பெரிய அளவிலான கட்டுப்பாடு இல்லாதது அத்துடன் கண்காணிப்பும் குறைவாகவே உள்ளதே இந்த திருட்டு தனங்களுக்கு காரணம் ஆகும்.

ஒன்றுசேர வேண்டும்

ஒன்றுசேர வேண்டும்

ஹேக்கிங் தொழிலுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் உலகளாவிய கட்டுப்பாடுகள் இயற்றப்படும் வரை ஜெஃப் பெசோஸ் போன்ற பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்படுவது இயல்பாக இருக்கும். பெரிய ஆட்கள் என்று அல்ல. யாரிடமெல்லாம் பணம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரையும் இந்த வலைக்குள் சிக்கவைக்க ஹேக்கர்களால் முடியும். ஏனெனில் அவர்களுக்கு தேவை பணம்.

திருட்டுநிறுவனங்கள்

திருட்டுநிறுவனங்கள்

இது தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்ட தரவு உரிமை சட்ட நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனமான AWO இன் இயக்குனர் எரிக் கைண்ட் கூறுகையில், "ஸ்பைவேர் (உளவு) தொழில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சில நிறுவனங்கள் இருந்தன. இப்போது 20 அல்லது அதற்கு மேற்பட்டவை உள்ளன, உலகெங்கிலும் உள்ள வர்த்தக கண்காட்சிகளில் தங்கள் பொருட்களை ஆக்ரோஷமாகத் தருகின்றன" என்றார்.

சவுதி இளவரசர்

சவுதி இளவரசர்

ஸ்பைவேர் டெவலப்பர்கள் குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் பிடிக்க உதவும் வகையில் தங்கள் தொழில்நுட்பத்தை சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு விற்கிறார்கள். ஆனால் உளவு(காட்டிக்கொடுக்கும்) வர்த்தகம் வளர்ந்து வருவதால், இது மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்படுகிறது,
ஏனெனில் இந்த தொழில்நுட்பத்தால் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மட்டுமில்லாமல் உலகின் பணக்காரர் பெசோஸ் ஆகியோர் வரை குறிவைக்க பயன்படுத்தப்பட்டது. கடந்த வாரம், அமேசான்.காம் இன்க் தலைமை நிர்வாக அதிகாரியான பெசோஸின மொபைல் போன், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானுக்கு சொந்தமான வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுவது வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பின்னர் ஸ்பைவேர்களுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

தெரியவில்லை

தெரியவில்லை

இதனிடையே செல்வந்தர் பெசோஸின் ஐபோனில் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் சந்தேகிக்கும் ஸ்பைவேரை புலனாய்வாளர்கள் அடையாளம் காணவில்லை என்றாலும், அத்தகைய தாக்குதலுக்கு திறன் கொண்ட தீம்பொருளை உருவாக்குவதாக என்எஸ்ஓ குழு மற்றும் ஹேக்கிங் குழுவை மேற்கோள் காட்டினர். கடந்த ஆண்டு ஹேக்கிங் குழுவை வாங்கிய மெமென்டோ லேப்ஸைப் போலவே என்எஸ்ஓவும் நாங்கள் இதை செய்யவே இல்லை என்று சத்தியம் செய்தது.

உலகமே பார்க்கும்

உலகமே பார்க்கும்

பெரிய ஆட்கள் என்றில்லை யாரை வேண்டுமானாலும் ஹேக்கர்களால் உளவு பார்க்கவும் முடியும். வங்கி தகவல்கள் , ஜிமெயில் பாஸ்வேர்டுகள் உள்பட அனைத்து ரகசிய தகவல்களை திருடவும் முடியும். உங்கள் போன் மற்றும் கணிணி மூலம் உங்கள் அந்தரங்கத்தை எட்டி பார்ப்பதோடு உலகம் அறிய செய்யவும் முடியும் என்பது உண்மை.

ஆனால் சிக்கல் உள்ளது

ஆனால் சிக்கல் உள்ளது

உண்மையில் "பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற வன்முறைக் குற்றங்களைத் தீர்ப்பதற்கு நிறுவனங்களும் அரசாங்கங்களும் தங்களுக்கு ஸ்பைவேர் கருவிகள் தேவை என்ற வாதத்தை முன்வைக்கின்றன" என்று ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த சிறப்பு அறிக்கையாளர் டேவிட் கேய் வியாழக்கிழமை ஒரு நேர்காணலில் தெரிவித்தார். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் தொழில்நுட்பத்தை விற்கும்போது மற்றும் மாற்றும்போது, அது உண்மையில் அந்த நியாயமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய முடியுமா என்பதே இங்கு சிக்கல் ஆகும்.

தடை விதிக்க

தடை விதிக்க

இந்நிலையில் மரணதண்டனை மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் கேய் மற்றும் ஐ.நா. நிபுணர் ஆக்னஸ் காலமார்ட் ஆகியோர் கூறுகையில், பெசோஸின் தொலைபேசி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் "கட்டுப்பாடற்ற சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் ஸ்பைவேர் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒரு உறுதியான எடுத்துக்காட்டு" என்றார்கள். தற்போதைய ஸ்பைவேர் வர்த்தகத்தை உலகளாவிய விற்பனை செய்வதற்கும் தனியார்கள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

குடிசைத்தொழில்

குடிசைத்தொழில்

இதனிடையே இந்தியாவில் ஹேக்கிங் நிறுவனங்கள் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள். இந்தியர்களின் தகவல்களை திருடுவது, அந்தரங்க தகவல்களை திருடுவது, உளவு பார்ப்பது, போன்ற செயல்களை செய்வோர் குடிசை தொழிலாக வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் இதை விற்று பணம் பறிப்பது தான் வேலையாக வைத்துள்ளார்க்ள். இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது மறுக்க முடியாத உண்மை. தொழில்நுட்பங்கள் வளரும் அதேவேகத்தில் அதை அழிக்கப் பயன்படுத்தும் ஆயுதமாக்குவோரும் அதிகரித்து வருகிறார்கள். இதற்கு கடிவாளம் போடாவிட்டால் ஒரு நாள் பேரழிவுக்கு இவை வழிவகுக்கும்.

English summary
Amid Jeff Bezos Hack Row: Spyware In India, how Spywares works in india nad other countries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X