For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீசாந்த் நிச்சயதார்த்தம் 'ஓவர்'.. இன்று திருமணம்

Google Oneindia Tamil News

கொச்சி: கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைதாகி சிறை சென்று மீண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண்ணான புவனேஸ்வரி குமாரியை அவர் கரம் பிடிக்கிறார்.

கொச்சியில் வைத்து நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர்.

ஸ்ரீசாந்த்தின் மனம் கவர்ந்த புவனேஸ்வரி

ஸ்ரீசாந்த்தின் மனம் கவர்ந்த புவனேஸ்வரி

ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி குமாரி. அரச குடும்பத்துப் பெண். இவரும், ஸ்ரீசாந்த்தும் சந்தித்துக் காதலில் வீழ்ந்தனர்.

2006ல் பூத்த காதல்

2006ல் பூத்த காதல்

கடந்த 2006ம் ஆண்டுதான் இருவருக்கும் காதல் பூத்ததாம். அப்போது ஜெய்ப்பூரில் நடந்த போட்டியின்போது விளையாட வந்திருந்தார் ஸ்ரீசாந்த்.

ஆட்டோகிராப்புடன் காதல் கிராபும்...

ஆட்டோகிராப்புடன் காதல் கிராபும்...

அப்போது ஸ்ரீசாந்த்திடம் ஆட்டோகிராப் வாங்கினாரம் புவனேஸ்வரி. கூடவே காதலும் ஒட்டிக் கொண்டு விட்டதாம். அன்று முதல் தீவிரமாக காதலித்து வந்தனராம்.

கொச்சியில் நிச்சயதார்த்தம்

கொச்சியில் நிச்சயதார்த்தம்

கொச்சியில் இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இரு வீட்டாரும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

குருவாயூரில் இன்று திருமணம்

குருவாயூரில் இன்று திருமணம்

இவர்களது திருமணம் நாளை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறுகிறது.

ஸ்ரீசாந்த் சூதாடட்ட சர்ச்சையில் சிக்கித் தவித்தபோது அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தாராம் புவனேஸ்வரி. அவருக்குத் தேவையான சட்ட உதவிகளையும் அவர்தான் முன்னின்று செய்து கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு திருமணம்

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு திருமணம்

இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், பின்னர் ஹோட்டலில் வரவேற்பு நடைபெறும் என்றும், திருமணம் இந்திய பாரம்பரிய முறைப்படி நடக்கும் என்றும் ஸ்ரீசாந்த்துக்கு நெருங்கிய நண்பரான ஜுனைத் ஆர்பி கூறினார்.

ராஜஸ்தானி, மலையாளி உணவுகள்

ராஜஸ்தானி, மலையாளி உணவுகள்

திருமண விருந்தின்போது ராஜஸ்தானி மற்றும் கேரள பாரம்பரிய உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாம்.

English summary
Sreesanth is all set to tie the knot with a girl from Jaipur on Thursday at Guruvayoor Temple. Bhuvaneshwari first met Sreesanth when he was in Jaipur to play for India in 2006 to collect his autograph. Bhuvaneshwari reportedly called Sreesanth during his confinement and was in touch with his legal team to keep track of the progress of the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X