For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இலங்கை அதிபர்

By Siva
Google Oneindia Tamil News

திருப்பதி: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பா குமாரியுடன் நேற்று இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு வந்தார். இரவுப் பொழுதை திருப்பதியில் கழித்த அவர்கள் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Sri Lankan president visits Tirupati temple

சிறிசேனா இலங்கை அதிபராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சிறிசேனா மற்றும் அவரது மனைவியை ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.

Sri Lankan president visits Tirupati temple

சாமியை தரிசித்துவிட்டு அவர்கள் விருந்தினர் மாளிகை செல்ல காரில் ஏறினர். கார் டிரைவர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வர 10 நிமிடங்கள் தாமதமானது. இதனால் சிறிசேனா 10 நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்தார்.

Sri Lankan president visits Tirupati temple

இதற்கிடையே இது தொடர்பாக போலீசாருக்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

English summary
Sri Lankan president Maitripala Sirisena visited Triupati temple on sunday with his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X