உயிருடன் இருந்த மாதிரியே காட்சி அளித்த ஸ்ரீதேவியின் முகம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

மும்பை: ஸ்ரீதேவி இறந்த பிறகும் அவரது முகத்துக்கு மேக்கப் போடப்பட்டிருந்ததை பார்த்த போது அவர் உயிருடன் இருந்தது போலவே இருந்தது.
துபாயில் நாத்தனாரின் மகன் திருமணத்துக்கு சென்ற கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி கடந்த வாரம் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பாத்ரூமில் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்தது தெரியவந்தது.

மாரடைப்பு இல்லை
ஸ்ரீதேவி குடிபோதையில் பாத்டப்பில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு எம்பாமிங் செய்யப்பட்டு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி
ஸ்ரீதேவியின் உடல் அந்தேரியில் உள்ள ஸ்போர்ட் கிளப் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு சிகப்பு நிறத்தில் சேலை அணிவிக்கப்பட்டிருந்தது.

லிப்ஸ்டிக்
ஸ்ரீதேவியின் முகத்தில் மேக்கப் போடப்பட்டு உதட்டுக்கு லிப்ஸ்டிக்கும் போடப்பட்டிருந்தது. இது பார்ப்பதற்கு ஸ்ரீதேவி உயிரோடு சும்மா படுத்திருப்பதை போல் காட்சியளித்தது. அத்தனை பொலிவுடன் இருந்ததை கண்ட ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர்.

மேக்கப்
ஸ்ரீதேவி அழகு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார் என்றும் அதைத்தான் அவர் விரும்புவார் என்று கூறப்படுகிறது. வயோதிக தோற்றம் தெரியக் கூடாது என்பதற்காகவே அவர் 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதும் அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய ஸ்ரீதேவிக்கு இறந்த போதும் அவர் உயிரோடு இருந்தது போலவே மேக்கப் போடப்பட்டிருந்ததை கண்டு ரசிகர்கள் இவரது மரணம் கனவாக இருக்க கூடாதா என்று மனவேதனை அடைந்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!