For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது மீன் மருந்து திருவிழா!

ஹைதராபாத்

By Devarajan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருள்ள மீனை தொண்டையில் வைத்து விழுங்க வைக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் மருந்தை சாப்பிட்டுச் செல்வார்கள்.

இந்த நிகழ்ச்சியை பத்தினி சகோதரர்கள், குடும்பத்தினர் பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். மீன் மருந்தைச் சாப்பிடுவதால் ஆஸ்துமா நோய்க்கு தீர்வு கிடைக்கிறது என்று நம்புவதால் இந்நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.

Stage set for fish medicine festival in Hyderabad

இதன்படி, நடப்பாண்டு மீன் மருந்து திருவிழா ஹைதராபாத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் மீன் மருந்து திருவிழாவுக்காக 32 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
Hyderabad: The district administration is making all efforts to make foolproof arrangements for the smooth conduct of the annual fish medicine administration programme to be held at Exhibition Grounds in Nampally from June 8 at 9 am to June 9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X