For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அம்மா' ஆதங்கத்தை 'அக்கா'விடம் கொட்டித் தீர்த்த கமல்... கொல்கத்தா விழாவில் ருசிகரம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஒரு மாநில முதல்வரை எதிர்பார்த்து இந்த விழாவுக்கு வந்த நான் ஒரு சகோதரியை கண்டுபிடித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

மேற்கு வங்காள அரசின் சார்பில் தலைநகரில் 19வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சி நேற்று நேதாஜி உள்ளரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், மிதுன்சக்ரவர்த்தி, கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பட நடிகர், நடிகையர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவை துவக்கி வைக்க வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சிறிது நேரம் மட்டுமே தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னர் எழுந்து, பம்பரமாக சுழன்று மேடை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே இருந்தார். இதை கண்டு மேடையில் அமர்ந்திருந்த நடிகர்கள், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல் ஹாசன் வியந்து பாராட்டினர்.

முதன்முறையாக

முதன்முறையாக

நடிகர் கமல்ஹாசன் இப்போதுதான் முதன்முறையாக மமதா பானர்ஜியை சந்திக்கிறார். அதை குறிப்பிட்ட கமல், உங்கள் முதல்வரின் வேகத்தை நான் இப்போது தான் முதல் முறையாக நேரில் பார்க்கிறேன் என்றார்.

முதல்வரா? டைனமோவா?

முதல்வரா? டைனமோவா?

நாற்காலியில் வெகுநேரம் அமர்ந்திருப்பதில் ஆர்வமில்லாத அவர், ஆற்றலில் 'டைனமோ' போல மேடையில் சுற்றி, சுழன்றுக் கொண்டிருந்தார்.

அன்பு சகோதரி

அன்பு சகோதரி

ஒரு முதல்வரை எதிர்பார்த்து இந்த விழாவுக்கு வந்த நான் ஒரு சகோதரியை கண்டுபிடித்தேன். அவரை நீங்கள் எல்லாம் 'தீதி' (அக்கா) என்று அழைப்பதன் அர்த்தம் எனக்கு இப்போது புரிகிறது.

குடும்பத்தலைவியாய்

குடும்பத்தலைவியாய்

அவரது ஆற்றல், அனுபவம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு விசேஷ வீட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கும் குடும்பத்தலைவியின் பாங்கினை அவரது அணுகுமுறையில் காணமுடிந்தது என்றார்.

திரைப்பட நூற்றாண்டு விழா

திரைப்பட நூற்றாண்டு விழா

நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னையில் நடைபெற்ற திரைப்பட நூற்றாண்டு விழா நினைவிற்கு வந்திருக்கும் போலிருக்கிறது. அந்த ஆதங்கத்தை கொல்கத்தாவில் பேசி தீர்த்துக் கொண்டார்.

English summary
Paying tribute to 100 years of Indian cinema, the 19th edition of the Kolkata International Film Festival (KIFF) was kicked off Sunday by actors Amitabh Bachchan and Kamal Hassan in a function that saw the presence of who's who of Bollywood and Tollywood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X