For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்"- ஜன. 16-ல் தொடக்கம்: பிரதமர் மோடி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: "தொடங்கிடு இந்தியா... எழுந்திடு இந்தியா" அதாவது "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற திட்டத்திற்கான ஆக்ஷன் திட்டத்தை ஜனவரி 16-ந் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். இன்றும் அவர் நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றினார். புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அவர் தனது உரையை துவங்கினார்.

மோடியின் மான் கி பாத் உரையின் விபரம் வருமாறு,

புத்தாண்டு

புத்தாண்டு

நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுத்தமான இந்தியா குறித்து பல செய்திகள் வருவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

வங்கிக் கடன்

வங்கிக் கடன்

வங்கியை அணுக வேண்டும் என்று நினைக்காத பாமர மக்களால் கூட இன்று முத்ரா திட்டத்தின் கீழ் எளிதில் கடன் பெற முடிகிறது. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டபோது உலக மக்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்தியாவின் பலத்தை நினைத்து நமக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

மின்சாரம்

மின்சாரம்

ஒரு புதிய கிராமத்திற்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது குறித்து அறிகையில், அந்த கிராம மக்களின் மகிழ்ச்சி குறித்த செய்தியும் நம்மை வந்து அடைகிறது. இந்த செய்திகள்

மீடியாவை இன்னும் சரியாக அடையவில்லை.

மோடி ஆப்

மோடி ஆப்

அனைத்து குடிமக்களும் நரேந்திர மோடி அப்ளிகேஷனை தங்களின் செல்போனில் டவுன்லோடு செய்து என்னுடன் தொடர்பில் இருக்கலாம். நரேந்திர மோடி மொபைல் ஆப்

மூலம் நாம் தொடர்பில் இருக்கலாம். பல நல்ல விஷயங்கள் பற்றி மக்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

துவங்கிடு இந்தியா

துவங்கிடு இந்தியா

வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி துவங்கிடு இந்தியா, எழுந்திடு இந்தியா(ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா) என்ற திட்டத்திற்கான ஆக்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு ஆகும்.

விவேகானந்தா

விவேகானந்தா

1995ம் ஆண்டில் இருந்து ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான

கொண்டாட்டம் ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை சத்தீஸ்கரில் உள்ள ராய்பூரில் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர்கள் திருவிழாவுக்கு சிறந்த ஐடியாக்களை அளியுங்களேன்? தயவு செய்து உங்களின் ஐடியாக்களை நரேந்திர மோடி அப்ளிகேஷனில் தெரிவிக்கவும்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

நேரடி மானியத் திட்டம் மூலம் மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நேரடி மானியத் திட்டமான இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலைகள்

சிலைகள்

வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி நாட்டில் உள்ள பெரும்தலைவர்களின் சிலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்ய முயற்சி செய்வோம்.

English summary
PM Narendra Modi addresses the nation on sunday through Mann ki baat. He said that the government is going to launch a complete action plan for ‘Start Up India, Stand Up India’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X