For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5000 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகை.. இல்லாவிட்டால் அபராதம்.. அச்சுறுத்தும் எஸ்.பி.ஐ வங்கி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வாடிக்கையாளர்கள் வங்கியில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 5000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

மும்பை: நகர்ப்புற வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக 5000 ரூபாய் இருக்க வேண்டும் என ஸ்டேட் பேங்ப் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வடிக்கையாளர்கள், குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 5000 ரூபாயை குறைந்தபட்ச வைப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.

பெரு நகரங்களில் (மெட்ரோபாலிட்டன்) வாழ்பவர்கள் 5000 ரூபாயும், நகரங்களில் வாழ்பவர்கள் 3000 ரூபாயும், சிறுநகர்களில் வசிப்போர் 2000 ரூபாயும் கிராமப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயையும் வைப்புத் தொகையையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அபராதம்

அபராதம்

மேலும், இந்தத் தொகையில் 50-75% குறைந்தால், 75 ரூபாய் அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், 50 ரூபாய் மற்றும் சேவை வரி வசூலிகப்படும் என்று தெரிவித்துள்ளது.

கிராமங்கள்

கிராமங்கள்

கிராமப் புறங்களில் 20 - 50 ரூபாய் அபராதத் தொகை, சேவை வரியும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஏப்ரல் 1, 2017லில் இருந்து அமலுக்கு வரும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

அதிர்ச்சி அறிவிப்பு

அதிர்ச்சி அறிவிப்பு

வங்கிகளில் 3 முறைக்கு மேல் பணபரிவர்த்தனை செய்தால், அதற்கு 50 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுடமை வங்கி

அரசுடமை வங்கி

ஐசிஐசி, ஆக்ஸிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகளே இப்படி கூறாத நிலையில், பெரும் சுமையை வடிக்கையாளர்கள் மேல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
State bank of india announced that, costumers must keep minimum balance rs. 5000 in their account. Otherwise extra charge will be collected. This announcement make their costumer much worried.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X