For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பழங்குடியினர் வாழ்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் தகவல்

மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் சுமார் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவை அதிமுக குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால், " தற்போது மொத்த பழங்குடியின மக்கள் தொகை விவரம் என்ன?" என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

State wise tribal people census:Union govt

இதற்கு மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜஸ்வன்ட் சின் சுமன்பாய் பபோர், எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 10 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரத்து 716 பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் மட்டும் 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேரும், ஆந்திர மாநிலத்தில் 26 லட்சத்து 31 ஆயிரத்து 145 பேரும், கர்நாடகாவில் 42 லட்சத்து 48 ஆயிரத்து 987 பேரும், கேரளாவில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 839 பேரும் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

English summary
New delhi: Total tribal people in Tamilnadu 7 lack 94 thousands the information published by central govt in parliament on monday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X