For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவோயிஸ்ட் தலைவர் கணபதி தலைக்கு ரூ.2.52 கோடி சன்மானம் அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் கணபதி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ2.52 கோடி சன்மானம் வழங்கப்படும் பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் என பல மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ளன.

இவர்களை ஒடுக்குவதற்காக எல்லைப் பாதுகாப்புப் படையினர், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகள் அருகே குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் கணபதி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு மொத்தம் ரூ.2.52 கோடி சன்மானமாக அளிக்கப்படும் என்று பல்வேறு மாநில அரசுகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியாவில் ஒருவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு இவ்வளவு அதிக சன்மானம் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

English summary
Many states announced the prize money on top Maoist leadership in the country and has declared a reward of Rs. 2.5 crore to anyone who will give inputs on the whereabouts of the Communist Party of India (Maoist) General Secretary Muppalla Lakshamana Rao alias Ganapathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X