For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகள் எதிரொலி: ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கையில் காங்கிரசை வீழ்த்தியது பாஜக

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் மூலம், நாடு முழுவதும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கையைவிட பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் இக்கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தும் மாநிலங்களும் அடங்கும்.

States ruled by Congress and BJP after 2016 Assembly polls

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோதிலும், கேரளா, அசாம் ஆகிய இரு மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 6-ஆக குறைந்துள்ளது.

அதேநேரம், அசாமில் ஆட்சியை பிடித்ததன் மூலம், பாஜக நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், கோவா, ஜார்கண்ட், அசாம், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது. 8ல் நேரடி ஆட்சி நடக்கிறது.

காங்கிரசை பொறுத்தளவில் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகா, பிகார், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், புதுச்சேரி ஆகிய 8 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதில் 2 இடங்களில் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறது.

English summary
After the Congress lost yet two more states, it now has only six states of the Union under its rule while in one, it is in power as a junior partner. The BJP, on the other hand, has come to power in Assam for the first time and with this, its tally of states under its control (alone or jointly) has gone up to eight. The rest of the states are ruled by various regional parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X