For Daily Alerts
குஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்
அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை சமூக விரோதிகள் தகர்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அம்ரேலி மாவட்டம் ஹரி கிருஷ்ணா ஏரியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. சூரத் தொழிலதிபர் ஒருவரின் அறக்கட்டளை மூலம் இந்த சிலை நிறுவப்பட்டது.

இச்சிலையை நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் உடைத்து தகர்த்து தரையில் வீசியுள்ளனர். சமூக விரோதிகளின் இந்நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள விரும்பாத சமூக விரோதிகளே இச்செயலை செய்திருக்கலாம் என்கிறார் காவல்துறை அதிகாரி ஒய்.பி. கோஹ்லி.