For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பேரணியில் கல்வீச்சு.. வாரணாசியில் களேபரம்

அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் இணைந்து ரோடு ஷோ நடத்தினர். இதில் அகிலேஷ் மனைவியும் எம்.பியுமான டிம்பிள் பங்கேற்றார்.விஷமிகள் சிலர் தொண்டர்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் அகிலேஷ் யாதவ் இணைந்து பங்கேற்ற தேர்தல் பேரணியின்போது கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால் பதற்றம் நிலவியது.

உத்தரபிரதேசம் இறுதிகட்ட வாக்குப்பதிவை சந்திக்க உள்ள நிலையில் அங்கு பிரசாரம் சூடு பறக்கிறது. பிரதமர் மோடி இன்று வாரணாசியில் பிரசாரம் செய்த நிலையில், அதே நகரில் அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் இணைந்து ரோடு ஷோ நடத்தினர். இதில் அகிலேஷ் மனைவியும் எம்.பியுமான டிம்பிள் பங்கேற்றார்.

Stones pelted at SP-Congress supporters at Varanasi

மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்த நிலையில், விஷமிகள் சிலர் தொண்டர்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் அந்த இடத்தில் இல்லை. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் கல்வீச்சில் ஈடுபட்ட விஷமிகள் தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் வாரணாசியில் பெரும் பரபரப்பு நிலவியது.

English summary
Chaos broke out in Varanasi even as Akhilesh Yadav and Rahul Gandhi's joint roadshow was underway as miscreants pelted stones at supporters who had gathered in huge numbers. While the stone pelting led to ruckus the road show had already moved forward and none of the leaders was present at the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X