For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி காவிரின்னு கத்தாதீங்க.... கடல் நீரை குடிநீராக்கி விவசாயம் பாருங்க... சொல்றார் சு.சாமி

Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி காவிரின்னு கத்தாதீங்க... கடல் நீரை குடிநீராக்கி விவசாயம் பாருங்கன்னு தமிழகத்திற்கு அறிவுரை சொல்லி இருக்கிறார் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கோரி விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Stop whining about Cauvery River, Subramanian Swamy tells Tamil Nadu

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 10 நாளைக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக எம்பியான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி தண்ணீருக்காக கத்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக கடல் நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த டுவிட்டர் பதிவு தமிழக விவசாயிகளை மேலும் அவமதிப்பது போல் உள்ளது.

English summary
Calling on Tamil Nadu to stop ‘whining’ over the Cauvery River, Bharatiya Janata Party leader Subramanian Swamy said that the state should instead desalinate sea water for drinking purpose as well as for irrigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X