For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர்தான் தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மைசூர்: தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த செல்வி.

14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் ஏழை குடும்பத்தில் பிறந்த செல்வி. இரு பிள்ளைகளுக்கு தாயான செல்வி, கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறி, மைசூரிலுள்ள 'ஒடநாடி' என்ற பெண்கள் காப்பகத்தில் சேர்ந்தார்.

மைசூர் காப்பகத்தில்தான், செல்விக்கு, வாகனத்தை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மைசூரில் டாக்சி ஓட்டி வாழ்க்கை நடத்தி, தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார் செல்வி.

ஆவணம்

ஆவணம்

தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமையை பெற்ற செல்வியின் அனுபவங்கள் குறித்து, 'டிரைவிங் வித் செல்வி' என்ற பெயரில் எலிசா பலோச்சி என்பவர் ஆவண படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

தைரியம்

தைரியம்

செல்வி கூறுகையில், பெண்கள் பெரும்பாலும் டாக்சி ஓட்டும் தொழிலுக்கு, வருவதில்லை. ஏனெனில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டிச்செல்ல பெரும்பாலான பெண்கள் அச்சப்படுவார்கள். ஆனால், நான் தைரியமாக வண்டி ஓட்டுகிறேன். தொடர்ந்து பிரச்சினையில்லாமல் போய்க்கொண்டும் உள்ளது.

உயிர்ப்போடு

உயிர்ப்போடு

அதேநேரம், மது குடித்துவிட்டு, வாகனத்தில் ஏற வரும் ஆண்களுக்காக நான் சவாரி செல்வதில்லை. வீட்டில் சும்மா இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. கட்டிபோட்து போல இருக்கும். டஸ்டீரிங் பிடிக்கும்போதுதான் உயிரோடு இருப்பதாக உணர்கிறேன் என்கிறார் செல்வி.

ஆணுக்கு நிகர்

செல்வி டாக்சி மட்டுமின்றி, பஸ், லாரி போன்றவற்றையும் ஆண்களுக்கு இணையாக இயக்கும் பயிற்சி பெற்றுள்ளார். கர்நாடகாவிலுள்ள பல பெண்களுக்கு செல்வியின் துணிச்சல் ஒரு முன்மாதிரியாக உள்ளது.

English summary
The recently released documentary ‘Driving with Selvi’ by Elisa Paloschi brings up the bitter truth about the lives of women in the rural India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X