For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாகப்பட்டினம் கடற்கரையில் எதிரொலித்த மெரினா மாணவர் புரட்சி!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மெரினாவைப் போல விசாகப்பட்டினம் கடற்கரையில் இளைஞர்கள் பேராட்டம் நடத்த திரண்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி விசாகப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மாணவர்கள் காவல்துறை கைத செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி சென்னை மெரினாவில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் அறவழிப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.

Students occupied Visakhapatnam coastal area for demanding Special status for Andhra Pradesh

நாட்டின் பிரபலங்களும் மாணவர்களின் அமைதி போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என வாழ்த்தினர். இதையடுத்து மத்தியரசு மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.

பின்னர் அவசரச்சட்டம் தமிழக சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது. மாணவர்களின் அறப்போராட்டமும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மெரினா புரட்சியை போலவே விசாகப்பட்டினத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். கைகளில் தேசியக்கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாணவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் மெரினாவில் நடைபெற்ற புரட்சிப் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Students occupied Visakhapatnam coastal area for demanding Special status for Andhra Pradesh. They crowded there as if Marina in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X