For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதியே திரும்பி போ.. எம்பி பிரக்யா தாகூரை முற்றுகையிட்டு பல்கலை மாணவர்கள் திடீர் கோஷம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரவாதியே திரும்பி போ.. எம்பி பிரக்யா தாகூரை முற்றுகையிட்டு பல்கலை மாணவர்கள் திடீர் கோஷம்

    போபால்: தீவிரவாதியே திரும்பி போ என போபால் எம்பி பிரக்யா தாகூரை முற்றுகையிட்டு போபால் பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ளது மகன்லால் சதுர்வேதி பல்கலைக்கழகம். இங்கு வருகை பதிவேடு குறைவாக உள்ளதால் மாணவர்கள் சிலரை தேர்வு எழுத பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி மறுத்துவிட்டது.

    இதை கண்டித்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சி.ஏ.ஏ. போராட்டம்: 130 போராட்டக்காரர்களுக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ் சி.ஏ.ஏ. போராட்டம்: 130 போராட்டக்காரர்களுக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ்

    ஒழுங்கீனமற்ற முறை

    ஒழுங்கீனமற்ற முறை

    உடல்நிலை சரியில்லாமல் மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் கூறுகையில் எங்கள் துறையின் தலைவர் ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொள்கிறார் என கூறினர்.

    முற்றுகை

    முற்றுகை

    இந்த நிலையில் மாணவர்களை சமாதானப்படுத்த நேற்று பாஜக எம்பி பிரக்யா தாகூர் அந்த பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அப்போது மாணவர்கள் எம்பி பிரக்யாவை முற்றுகையிட்டனர்.

    கோஷம்

    கோஷம்

    பிரக்யாவை தேச துரோகி என்றும் தீவிரவாதியே திரும்பி போ என்றும் கோஷமிட்டனர். இதனால் அங்கிருந்து பிரக்யா திரும்பி சென்றார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேசிய மாணவர் அமைப்பினர் நான் ஒரு தீவிரவாதி என கோஷம் எழுப்புகின்றனர்.

    நடவடிக்கை

    ஒரு எம்பியை தீவிரவாதி என்கின்றனர். இதெல்லாம் சட்டவிரோதமானது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அவர்கள் அனைவரும் தேசதுரோகிகள். அவர்களுக்கு எதிராக நிச்சயம் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பேன் என்றார்.

    English summary
    MP Pragya Thakur faces very hectic situation while she was in Bhopal University as students raises Terrorist go back slogan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X