For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி தேர்தலில் பாஜக, மோடிக்கு மிகபெரும் தோல்வி... விளாசிய சர்வதேச ஊடகங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் தோல்வியை பிரதமர் மோடிக்கு பெரும் பின்னடைவு என விமர்சித்து எழுதியுள்ளன சர்வதேச ஊடகங்கள்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியில் ஆளும் பாஜக வெறும் 8 இடங்களில்தான் வெல்ல முடிந்தது.

    Stunning defeat, Major Setback for Modi, World media on Delhi Election Results

    டெல்லியில் ஆட்சியை கைப்பற்றலாம் என கனவு கண்ட பாஜக, 200 எம்.பிக்கள், மத்திய அமைச்சர்கள் பட்டாளம், மாநில பாஜக நிர்வாகிகள் என ஒட்டுமொத்த கட்சியையே களமிறக்கியது. இந்து வாக்குகளை ஒன்றிணைக்கும் வகையில் எத்தனையோ சர்ச்சைக்குரிய பிரசாரங்களையும் பாஜகவினர் மேற்கொண்டனர்.

    இதனால் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்களுக்கு தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்யவும் தடை விதித்தது. இந்நிலையில் நேற்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்ததைப் போல ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை பெற்றது. ஆட்சி கனவில் இருந்த பாஜகவுக்கு பலத்த அடி விழுந்தது.

    எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்.. அமித் ஷாவின் வலதுகை.. மோடியின் செல்லம்.. இப்படி தோத்துட்டாரே! எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்.. அமித் ஷாவின் வலதுகை.. மோடியின் செல்லம்.. இப்படி தோத்துட்டாரே!

    இத்தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள The New York Times, பிரதமர் மோடியின் கட்சிக்கு பின்னடைவு என தலைப்பிட்டுள்ளது. அதில், அடையாளப்படுத்துதல் தொடர்பாகவும் பிரதமர் மோடி டெல்லியில் பிரசாரம் செய்தார். டெல்லியில் போராடுகிறவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என்றும் ஒரு அமைச்சர் பேசினார். மோடியின் இந்து தேசியவாத கொள்கைகளில் மென்மைப் போக்கை கையாளும் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

    The Washington Post மோடியின் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி என்ற தலைப்பில், கெஜ்ரிவால் அரசு 5 ஆண்டுகாலங்களில் பள்ளி கல்வி, மின்கட்டணம், சுகாதாரம் ஆகியவற்றில் செய்த மாற்றங்களுக்கு கிடைத்த வெற்றி என பதிவு செய்துள்ளது. இதே போல் Al Jazeera வும் கெஜ்ரிவால் அரசின் 5 ஆண்டுகால செயற்பாடுகளுக்கான வெற்றி இது என்கிறது.

    The Guardian ஏடும், கெஜ்ரிவால் அரசின் 5 ஆண்டுகால சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளதுடன் வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சித்த பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்தது என குறிப்பிட்டுள்ளது.

    English summary
    News media across the world praised the Aam Aadmi Party's Biggest victory in Delhi Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X