For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகார் அளிக்க வந்தவரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

லக்னோ: லக்னோவில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் புகார் அளிக்க வந்தவரை காலை பிடித்துவிட வைத்த காவல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் மோகன்லால் கஞ்ச் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.

 Sub Inspector gets foot massage; gets suspended in UP

அப்போது அதே காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரியும் ராம் யக்ய யாதவ், அந்த நபரை கட்டாயப்படுத்தி தனது காலை பிடித்து மசாஜ் செய்ய வைத்திருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை அடுத்து துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சில் சைனி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

எனினும், அந்நபர் புகார் அளிக்க வந்தவரா அல்லது கைதியா என்பது உறுதியாக தெரியவில்லை என போலீசார் கூறினர். இவ்விவகாரம் பற்றி விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

English summary
A sub inspector has been suspended after a video of him getting foot massage from a man became viral drawing outrage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X