For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரவிந்த் சுப்ரமணியன் விவகாரத்தில் அடங்க மறுக்கும் சு.சுவாமி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மீது நம்பிக்கை இருப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்த பின்னரும் பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மனதளவில் இந்தியர் இல்லை என்றும் குற்றம்சாட்டினார் சு.சுவாமி. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநராக 2-வது முறையாக பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றார் ரகுராம் ராஜன்.

Subramanian Swamy launches fresh attack against Arvind Subramanian

இதன் பின்னர் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், அமெரிக்காவுக்கு சார்பானவர்; இந்திய நிறுவனங்களுக்கு எதிரானவர் என்ற பல்லவியைப் பாடத் தொடங்கினார் சு.சுவாமி. அவருக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பதிலடி கொடுத்தார். அரவிந்த் சுப்ரமணியன் மீது அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார் அருண்ஜேட்லி.

இதில் கடுப்பாகிப் போன சு.சுவாமி இன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், அரவிந்த் சுப்ரமணியன் மீது மத்திய பாஜக அரசு நம்பிக்கை இருப்பதாக சொல்கிறது... அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தற்காலிகமாக கைவிடுகிறேன்.. அரவிந்த் சுப்ரமணியம் குறித்த உண்மைகள் விரைவில் வெளிவரும்... அதுவரை காத்திருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.

விடாது கருப்பு!

English summary
BJP MP Subramanian Swamy today said he will "suspend" his demand for sacking the chief economic advisor if the government considers him patriotic despite his attempts in the past of trying to twist India's arm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X