For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து மதத்துக்கு மாறினாரா ஜேசுதாஸ்?... சு.சாமி டிவிட்டால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், இந்து மதத்துக்கு மாறி விட்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இத்தகவலை ஜேசுதாஸ் குடும்பத்தார் மறுத்துள்ளனர்.

தமிழ் உட்பட 14 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். ஏழு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

கிறிஸ்தவரான ஜேசுதாஸ், இந்து கடவுள்கள் குறித்து பல்வேறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இருப்பினும், அவர் இந்து மதத்தைச் சேராதவர் என்பதால், கேரளாவில் உள்ள பிரபல குருவாயூர் கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மதம் மாறினார்?

மதம் மாறினார்?

அதனைத் தொடர்ந்து தனது 76வது பிறந்தநாளையொட்டி, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு அவர் சென்றார். இதனால் அவர் இந்து மதத்துக்கு மாறியதாக செய்திகள் வெளியாகின.

வரவேற்பு...

இந்நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "ஜேசுதாஸ் குடும்பத்தாருடன், தன் மூதாதையர்களின் மதமான இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது உண்மையாக இருந்தால் அவரை வரவேற்கலாம்" என அவர் தெரிவித்திருந்தார்.

டிவிட்டர்...

டிவிட்டர்...

இந்த தகவலை டிவிட்டரில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுப்பு...

மறுப்பு...

ஆனால், இந்தத் தகவலை ஜேசுதாஸின் மனைவி பிரபா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்த வதந்தி எப்படிப் பரவியது என்று தெரியவில்லை. ஆனால், இதில் சற்றும் உண்மையில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The latest news claiming that Yesudas has converted to Hinduism has been doing the rounds on social media recently, and now in a tweet, Member of Parliament Dr Subramanian Swamy has also welcomed the versatile singer to Hinduism, based on the unconfirmed piece of information he gathered from the micro-blogging site Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X