For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொத்து கொத்தாக தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை விழுந்து விழுந்து வரவேற்ற சு. சாமி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை விழுந்து விழுந்து வரவேற்ற சு. சாமி!-வீடியோ

    டெல்லி: இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்.

    இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளார். ஏராளமான பெண்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

    குழந்தைகள், பெண்கள் என ஈவு இரக்கமின்றி கொன்று குவித்துள்ளார். இதனால் ராஜபட்ச மீது தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்தது. ராஜபட்சவை கண்டிக்க தவறியதாக அமைச்சரவையிலிருந்து திமுகவினரை விலகச் சொன்னார் கருணாநிதி.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்நிலையில் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா. வரை முறையிட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. மேலும் அவர் ஐ.நா. சபையில் உரையாற்றக் கூடாது என்று திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

     பாஜக பிரச்சாரம்

    பாஜக பிரச்சாரம்

    மக்களவை தேர்தலின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்த போது அந்த படுகொலையை காங்கிரஸ் ஆட்சி தட்டிக் கேட்கவில்லை என்ற கருத்தும் தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக சார்பில் முன்வைக்கப்பட்டது.

    பாஜக தலைமை

    பாஜக தலைமை

    ஆனால் அதே பாஜகவின் மூத்த எம்பியான சுப்பிரமணியன் சுவாமி ராஜபட்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை பாஜக தலைமை கண்டிக்கவில்லை.

    வாய் பொத்தி நிற்கும் பாஜக தலைமை

    அதுபோல் டெல்லிக்கு வந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் ராஜபட்சவையும் அவரது சகாக்களையும் சுப்பிரமணியன் சுவாமி சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார். ஏற்கெனவே நேருக்கு மாறாக கருத்துகளை சொல்லி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டிக்காத பாஜக தலைமை அவரது செயல்பாடு தங்கள் கட்சிக்கு களங்கம் வந்தாலும் எதையும் கண்டிக்காமல் வாய் பொத்தி நிற்பது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    English summary
    Subramanian Swamy Welcomes Former President of Sri Lanka Shri Rajapaksa and His Team at Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X