For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென நிறுத்தப்பட்ட சந்திராயன் 2.. இஸ்ரோ விஞ்ஞானிகள் நிச்சயம் சாதிப்பர்.. மக்கள் கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்

    ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு செலுத்தும் திட்டத்தை இஸ்ரோ திடீரென நிறுத்தி வைத்ததால், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நேரில் காண வந்திருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் முறையாக 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவதை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Suddenly discontinued Chandrayaan 2 .. ISRO scientists will definitely achieve .. peoples opinion

    வரலாற்று சிறப்பு மிக்க சந்திராயன் 2 விண்ணில் பாய்வதை பார்க்க காசி முதல் கன்னியாகுமரி வரை, பல இடங்களில் இருந்தும் 5,000 பார்வையாளர்கள் குவிந்தனர். சந்திராயன் 2-வை விண்ணில் ஏவ சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் போது, கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது இஸ்ரோ.

    இதனால் சந்திராயன் 2 விண்ணில் பாய்வதை நேரில் காணும் ஆவலில் காத்திருந்த 5,000 பார்வையாளர்கள் இஸ்ரோவின் திடீர் அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.

    இது குறித்து கருத்து தெரிவித்த பார்வையாளர்கள், கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்தியாரன் 2 விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறினர்.

    மிகப்பெரிய சாதனையை நேரில் பார்க்க காத்திருந்த தங்களுக்கு கடைசி நேர மாறுதல், எதிர்பாராத ஏமாற்றத்தை தந்துள்ளதாக குறிப்பிட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரூ.1,000 கோடி மதிப்பிலான சந்திராயன் 2 -வை விண்ணில் ஏவி அபாய முயற்சியை எடுக்காதது நல்லது தான் என்றும் பார்வையாளர்கள் கூறினர். எனினும் சந்திராயன் 2 திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.

    English summary
    Visitors were very disappointed to see the historic event when ISRO abruptly terminated the Moon-2 spacecraft.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X