For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதற்கும் ஐஎஸ்ஐ பின்னணி என்று கூறுவார்கள்.. பிசுபிசுக்க வைக்கும் வித்தை..சுக்பீர் சிங் பாதல் காட்டம்!

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: பஞ்சாபில் விவசாய மசோதாவை கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் பாரதிய கிசான் யூனியன் மற்றும் சிரோமணி அகாலிதளம் இன்றும் பெரிய அளவில் மறியல் போராட்டம் பேரணி நடத்தி வருகின்றன.

ஜலந்தர் ரயில் சந்திப்பில் பாரதிய கிசான் யூனியன், ஜமுறி கிசான் சபாவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களில் இறங்கி நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, விவசாய மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Sukhbir Singh Badal said Whenever struggle is launched, they said Pakistan’s ISI backs it

இதேபோல், சிரோமணி அகாலிதளமும் அமிர்தசரஸில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் மறியல் நடந்து வருகிறது. இவர்கள் அமிர்தசரஸில் இந்தப் பேரணியை துவக்கி கவர்னர் மாளிகையில் முடித்து, கவர்னரிடம் மனு கொடுக்கவுள்ளனர்.

கொரோனா பாதித்த கண் பார்வையற்றவர்.. கணீர் குரலால் பாட்டு பாடி வார்ட்டை மகிழ்விக்கும் திருமூர்த்தி கொரோனா பாதித்த கண் பார்வையற்றவர்.. கணீர் குரலால் பாட்டு பாடி வார்ட்டை மகிழ்விக்கும் திருமூர்த்தி

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாகி இருக்கும் இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் இந்தக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

Sukhbir Singh Badal said Whenever struggle is launched, they said Pakistan’s ISI backs it

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரத்தில் இருந்து விவசாயிகள், சிரோமணி அகாலிதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்றும், குறைந்தபட்ச விலையில் பாதிப்பு ஏற்படும் என்றும், கார்பரேட்களின் கைகளுக்கு விவசாயம் செல்லும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Sukhbir Singh Badal said Whenever struggle is launched, they said Pakistan’s ISI backs it

இன்று பேரணிக்கு புறப்படுவதற்கு முன்பு பேட்டி அளித்த சுக்பீர் சிங் பாதல் ''எப்போது ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், பாகிஸ்தான் ஐஎஸ்ஐ பின்னணியில் இருக்கிறது என்று கூறுகின்றனர். இது வேறு ஒன்றுமில்லை, ஆர்ப்பாட்டம் பிசு பிசுத்து போவதற்கான வித்தை'' என்றார்.

English summary
Sukhbir Singh Badal said Whenever struggle is launched, they said Pakistan’s ISI backs it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X