சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் சுனந்தா மர்ம மரண பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசி தரூர் பெயரும் குற்றப்பத்திரிகையில் உள்ளது. டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையால் சசிதரூர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications