• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சுனந்தா புஷ்கரின் மரணம் எழுப்பும் கேள்விகளும்!… சசிதரூரின் கோபமும்!!

|

டெல்லி: "நான் பணம் சேர்ப்பதை விரும்புகிறேன்... பணத்தின் மூலம் எனக்கு தேவையானதை நான் வாங்கிக்கொள்வதில் ஒரு ‘கிக்' இருக்கிறது" என்று மகிழ்ச்சியாக கூறிய கோடீஸ்வர பெண்தான் சுனந்தா புஷ்கர்.

இந்த பணமே அவரது உயிரை பறிக்க காரணமாக இருந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆளுங்கட்சியில் மிகமுக்கிய அமைச்சராக இருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த சசிதரூரின் மனைவியான சுனந்தாவின் மர்ம மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகிறது.

இந்த மரணத்தில் பணம் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. எனவேதான் இது குறித்து சிறப்பு புலனாய்வுத்துறை போலீசார் ஒவ்வொரு முறையும் சசிதரூரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sunanda Pushkar knew it was coming, probe reveals

திட்டமிடப்பட்ட கொலை

சுனந்தாவின் கொலை ஒரு திடீர் நிகழ்வு அல்ல... 8 மாதங்களாகவே இந்த கொலைக்காக திட்டமிட்டு மெதுவாக திட்டமிட்டு மிகவும் ஸ்மார்ட்டாக தெளிவாக ஐயப்பாடு எதுவும் எழாத வகையில் அரங்கேற்றியுள்ளனர். சமீபத்தில் நிகழ்ந்த கொலைகளில் துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு செயல்படுத்தப்பட்ட கொலை என்றும் இதனை வருணிக்கின்றனர்.

கோடீஸ்வர பெண்மணி

சுனந்தாவிற்கு ரூ93 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. ஆனால் சசிதரூரின் சொத்து மதிப்போ 6.34 கோடி ரூபாய்தான். எனவேதான் சுனந்தாவின் மரணத்தில் பணம் ஒரு பிரதான காரணியாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அழுத்தம் தந்த நிகழ்வு

2010 ஆம் அண்டு சசிதரூர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, ஐ.பி.எல். கிரிக்கெட் கொச்சி அணியின் ரூ.70 கோடி மதிப்புள்ள 19 சதவீத பங்குகளை சுனந்தாவுக்கு வழங்க சசிதரூர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனை அப்போது அவர் மறுத்தார். ஆனால் இந்த நிகழ்வுதான் சுனந்தாவிற்கு பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது.

அவர் மிரட்டலுக்கு ஆளானாரா?

அவர் மிரட்டலுக்கு ஆளானாரா? அவர் வைத்திருந்த அளவிற்கு அதிகமான பணமே அவரது உயிரை பறித்துவிட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர் சிறப்பு புலானாய்வுப் பிரிவு அதிகாரிகள்.

ஹோட்டல் அறையில் உயிரிழந்து கிடந்த சுனந்தவின் சடலம், அதனையடுத்து மருத்துவர்கள் கொடுக்கப்பட்ட உடற்கூறு பரிசோதனை அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதனையடுத்தே போலீசாரின் விசாரணையின் கோணம் வேறு பக்கம் திரும்பியுள்ளது.

பணம்தான் பிரதானம்

சுனந்தா புஷ்கர் கடந்த 2004ஆம் ஆண்டு கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியதில் பணத்தை இழந்தார். இதனையடுத்து துபாய் சென்ற அவர், தனது வணிக ரீதியான தொடர்பை பலப்படுத்தி ரூ.93 கோடி ரூபாய் சம்பாதித்தார். இந்த பணத்தைதான் ஐ.பி.எல் கொச்சி அணியின் பங்குகளை வாங்குவதற்கு பயன்படுத்தியாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவேதான் இது தொடர்பான கேள்விகளை சசிதரூரிடம் ஒவ்வொரு முறையும் எழுப்புகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

நிழல் உலகத் தொடர்பு

இந்த கொலைக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவே நிழலுலக தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. துபாயைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாமே என்றும் இந்த கொலை குறித்த விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். சுனந்தாவின் உடற்கூறு மாதிரிகள் ஆய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை முடிவுகள் வந்த பின்னரே இந்த கொலைக்கான காரணம் தெரியவரும்.

யாருடைய அழுத்தம் இது?

சுனந்தாவின் சடலம் கிடந்த இடத்தை பார்த்த ஹோட்டல் பணியாளர், மரணம் குறித்து விசாரணை செய்த அதிகரிகள், உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர் என அனைவருமே ஒருவித அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவேதான் தற்கொலை என்று உடனடியாக அறிவித்து முடிக்க நினைத்தனர். ஆனால் அந்த அழுத்தமே இன்று பூதாகரமாக வெடித்துக்கிளம்பியுள்ளது. ஆனாலும் இந்த கொலையை மூடி மறைக்க முயற்சி செய்தவர்கள் யார் என்பதுபற்றிய விசாரணையைத்தான் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்காணிப்பு வளையத்தில் தரூர்

சுனந்தாவின் கணவரும் முன்னாள் அமைச்சருமான சசிதரூரிடம் சில கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்ட போதுமட்டும் சசிதரூரிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது, ஐ.பி.எல். கிரிக்கெட் கொச்சி அணி முறைகேடு குறித்து கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. விசாரணையின் போது பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதிலை தராத சசிதரூரை டெல்லி போலீஸ் எச்சரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளா திரும்பிய தரூர்

சில கேள்விகளுக்கு விடையளித்துள்ள அவர், சிறப்பு புலானாய்வு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திருவனத்தபுரத்திற்கு சென்றுள்ளார். சசிதரூர் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் பயணங்கள் குறித்தும், தொடர்பு கொள்ள வசதியாக தொலைபேசி, செல்போன் எண்கள் போன்றவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்று போலீஸ் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. சசிதரூரிடம் அடுத்த சுற்று விசாரணை இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய் கதைகள்

அதேநேரத்தில் தன்னுடைய கோபத்தை தற்போது மீடியாக்கள் பக்கம் திருப்பியுள்ளார் சசிதரூர். மீடியாக்கள் குறிப்பாக கேரளா மீடியாக்கள் என்னைப்பற்றி பொய்யான தகவல்களை வெளியிட்டு வெறுப்படையச் செய்துள்ளன. எந்தஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பொய்யாக கதைகள் உருவாக்கப்படுகிறது, போலீஸ் தகவல்கள் என காரணம் காட்டப்படுகிறது.

ரேட்டிங்கை அதிகரிக்க

நமது நாட்டிற்கு மிகவும் நல்ல மற்றும் நேர்மையான பத்திரிக்கை துறையே தேவை. கிளுகிளுப்பூட்டுவதற்கும், டி.ஆர்.எஸ். ரேட்டிங்கை கூட்டுவதற்காக பொய்யான தகவல்களை ஒளிபரப்பு செய்யக்கூடாது மற்றும் பத்திரிக்கையில் வெளியிடக்கூடாது." என்று சசிதரூர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வினையின் பயன்

இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் மீடியாவுக்கு செல்வதற்கு முன்னதாக என்னிடம் தெரிவிக்கட்டும். இதுபோன்ற அனைத்து தகவலும் முற்றிலும் அடிப்படையற்றது. நான் விசாரணை அதிகாரிகளுக்கு முழுவதும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றேன் என்றும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்... வினைக்கான பயனை அறுவடை செய்துதானே ஆகவேண்டும் என்பதை உணராதவரல்ல சசிதரூர்.

English summary
Sunanda Pushkar was worth Rs 93 crore as per her own declaration and she had once said, 'I love making money and I get a kick out of buying things myself.' This was in response to the various allegations hurled at the time of the IPL in which was accused of acting as a proxy for her powerful politician husband Shashi Tharoor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X