For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

BREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2014ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் வலுத்துள்ளன.

Newest First Oldest First
3:58 PM, 6 Sep

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது - ஜெயக்குமார்

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து விரைந்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

1:14 PM, 6 Sep

7 தமிழர் விடுதலை தொடர்பான உத்தரவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

12:59 PM, 6 Sep

7 தமிழர் விடுதலை தொடர்பான தீர்ப்பு.. அற்புதம்மாள் மகிழ்ச்சி

உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்- அற்புதம்மாள்

12:58 PM, 6 Sep

7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனு செய்திருந்தது

மத்திய அரசின் மனுவை விசாரித்து பைசல் செய்தது சுப்ரீம் கோர்ட்

நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன்சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவு

12:58 PM, 6 Sep

ஏழு தமிழரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்- சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
12:03 PM, 6 Sep

ஓரினச்சேர்க்கையை குற்றம் என்பது பகுத்தறிவற்றது மற்றும் அவமதிப்பானது - நீதிபதிகள்

இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்

11:57 AM, 6 Sep

ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு

அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு

11:53 AM, 6 Sep

சமுதாயம் மாறினால்தான் முன்னேற்றம் அடையும் - நீதிபதிகள் அமர்வு

மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - நீதிபதிகள் அமர்வு

மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமை தன்பாலின உறவு கொள்பவர்களுக்கும் உண்டு

உச்சநீதிமன்றம் அதிரடி

11:50 AM, 6 Sep

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து

உச்சநீதிமன்றம் அதிரடி

11:44 AM, 6 Sep

நான் என்னவாக இருக்கிறேனோ அதுவே நான், என்னை அப்படியே ஏற்றுக்கொள்

ஜெர்மன் பொன்மொழியை கூறிவிட்டு தலைமை நீதிபதி தீர்ப்பு வாசிப்பு

11:41 AM, 6 Sep

377 பிரிவு சட்டத்திற்கு எதிரான வழக்கு

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது

11:34 AM, 6 Sep

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எப் நாரிமன், நீதிபதி ஏ எம் கான்வில்கர்

நீதிபதி டி ஒய் சந்திரசாத், நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வு தீர்ப்பளிக்கிறது

தீபக் மிஸ்ரா, ஆர். எப் நாரிமன், டி ஒய் சந்திரசாத், இந்து மல்கோத்ரா தனி தனியாக தீர்ப்பு அளிப்பார்கள்

நீதிபதி ஏ எம் கான்வில்கர் தனியாக தீர்ப்பளிக்க மாட்டார்

11:25 AM, 6 Sep

ஓரினச்சேர்க்கை குற்றமா?, சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு

தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளிக்கிறது

7:57 AM, 6 Sep

ஓரினச்சேர்க்கை குற்றமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு

பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான சட்ட பிரிவில் இன்று தீர்ப்பு

இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது

English summary
Supreme Court allows Tamil Nadu Government to take decision and recommend the Governor to release all the seven Rajiv Gandhi assasins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X