For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

ஓரின சேர்க்கையை ரத்து செய்வது குறித்து சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு சொல்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: மனம் ஒத்து நடைபெறும் ஓரினச் சேர்க்கை உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய அரசியல் சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்வதா அல்லது செல்லும் என்று அறிவிப்பதா என்ற முக்கியத் தீர்ப்பை நாளை சுப்ரீம் கோர்ட் அறிவிக்கவுள்ளது.

"ஒருத்திக்கு ஒருவன் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி" இதுதான் நமது கலாச்சாரம்... இதுதான் நமது பண்பாடு என்று வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் வெள்ளைக்காரனை பார்த்து பழக்கவழக்கம், துணிகளைத்தான் மாற்றி கொண்டிருந்த நம்ம ஆட்கள் கடைசியில் முறையற்ற ஜோடிகளையே மாற்றி கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

பகிரங்க வாழ்க்கை

பகிரங்க வாழ்க்கை

இதன் விளைவு... ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் எந்தவித கூச்சமும் வெட்கமும் இன்றி வாழ ஆரம்பித்து விட்டார்கள். ஃபேஷன் என்று நினைத்து கொண்டார்களா என்னவோ, இப்படி ஓரினசேர்க்கையோடு வாழ்கிறோம் என்று பகிரங்கமாகவும் சொல்லி கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

அருவெறுப்பானது

அருவெறுப்பானது

ஆனால் சட்டப்பிரிவு 377 என்ன சொல்கிறது என்றால், இயற்கை நியதிக்கு மாறாக ஆணும், பெண்ணும் எப்படி இணைந்தாலும் அது தப்புதான்... தண்டனைக்குரியது என்றும் கூறுகிறது. அதுமட்டுமல்ல, இந்த உறவு முறை அருவெறுப்பானது என்றும் சட்டம் சொல்கிறது.

நீண்ட கால விசாரணை

நீண்ட கால விசாரணை

ஆனாலும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இந்த 377-வது பிரிவை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்றும், சேர்ந்து வாழ அனுமதி கேட்டும் பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தொடங்கினர். இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நீண்ட காலமாகவே விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ஒவ்வொரு முறை நடைபெற்ற விசாரணையின்போதும் பல்வேறு விதமான வாதங்களுக்கான முடிவுகளை சொன்னார்கள். " சமூக பண்பாடு காலத்துக்கு காலம் மாறுபடும். வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்றவாறு சட்டமும் தன்னை மாற்றிக் கொள்ளும்" என்றனர். பின்னர், இந்த சட்டப்பிரிவை நீக்கக்கோரும் இவ்வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நோட்டீசையும் அனுப்பினார்கள். இந்த விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டிடமே முடிவை விடுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆதரவா? எதிர்ப்பா?

ஆதரவா? எதிர்ப்பா?

இந்நிலையில் நாளை இந்த முக்கிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அதில் சர்ச்சைக்குரிய 377-வது சட்டப்பிரிவு செல்லுமா, செல்லதா என்பது குறித்து நீதிபதிகள் உத்தரவிட உள்ளனர்.

English summary
Supreme Court to deliver verdict on Section 377 tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X