For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் செல்லும்.. அரசு சேவைகளுக்கு கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம்...சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ

    டெல்லி: அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் ஆதார் எண் கட்டாயமாகிறது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பை அளித்துள்ளனர்.

    நீதிபதி சிக்ரி 40 பக்கம் கொண்ட தீர்ப்பை முதலில் வாசித்தார். தீர்ப்புக்குப் பின்னர் ஆதார் எண் அரசு சேவைகளுக்கு கட்டாயம் என்ற தீர்ப்பை அவர் அறிவித்தார்.

    Supreme court delivers judgement today on the Aadhar is mandatory

    நீதிபதி சிக்ரி தீர்ப்பின் விவரம்:

    இந்தியாவில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது ஆதார்தான். ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே சரியானது. ஆதார் மற்ற ஆவணங்களை போன்றதல்ல. தனி நபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளது.

    [அரசுக்கு கட்டாயம்.. தனியாருக்கு தேவையில்லை.. ஆதார் தீர்ப்பின் முழு விபரம்! ]

    ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன. ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. கையெழுத்தை கூட போலியாக போடலாம். ஆதார் எண்ணை போலியாக்க முடியாது.

    தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம். பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

    Supreme court delivers judgement today on the Aadhar is mandatory

    அதேநேரத்தில் வங்கி கணக்கு தொடங்க செல்போன் இணைப்பு பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது. சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. கல்வி என்பதை அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கொண்டு வரக்கூடாது. அரசியல் சாசன அமர்வுப்படி ஆதார் செல்லும் என்று நீதிபதி ஏகே சிக்ரி உள்ளிட்ட 3 நீதிபதிகளின் தீர்ப்பில் தெரிவித்தார்.

    Supreme court delivers judgement today on the Aadhar is mandatory
    English summary
    Supreme court delivers judgement today on the Aadhar is mandatory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X