For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க சொன்னது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை.. தமிழகத்தின் தலையில் இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட்!

நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் என சுப்ரீம்கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை..

    டெல்லி: நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் தான் என சுப்ரீம்கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது தமிழகத்துக்கான காவிரி நீரை குறைத்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது.

    தீர்ப்பில் காவிரி மேலாண்மை ஸ்கீம் என குறிப்பிடப்பட்டிருந்த அந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    தொடர் போராட்டம்

    தொடர் போராட்டம்

    இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரி பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வாரியம் அல்ல ஸ்கீம்

    வாரியம் அல்ல ஸ்கீம்

    தீர்ப்பை நடைமுறைபடுத்தக்கோரி உச்சநீதிமன்றம் அளித்தத 6 வார கால அவகாசம் கடந்த 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதுவரை தீர்ப்பு குறித்து வாய்திறக்காத மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்ல ஸ்கீம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றது.

    செயல் திட்டம்தான்

    செயல் திட்டம்தான்

    மேலும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தது. இதுகுறித்து இன்று விளக்கமளித்த சுப்ரீம் கோர்ட், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என விளக்கமளித்துள்ளது.

    பெரிய பிரச்சனைதான்

    பெரிய பிரச்சனைதான்

    மேலும் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார். தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    இடியை இறக்கியுள்ளது

    இடியை இறக்கியுள்ளது

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது தமிழக விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

    கேள்விக்குறியாகியுள்ளது

    கேள்விக்குறியாகியுள்ளது

    உச்சநீதிமன்றத்தின் இந்த பதிலால் தமிழக விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத தமிழக விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.

    English summary
    Supreme court explains that Cauvery scheme is not Cauvery Management board. In Judgement its mentioned only Cauvey Management scheme said Superme Court Chief justice Deepak misra. Supreme court explanation shocks TamilNadu farmers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X