For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போன் எண், அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்: சுப்ரீம் கோர்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் நலத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நடைபெற்று வருகிறது.

Supreme court extended all deadlines of Aadhaar linkages to March 31, 2018

இந்த வழக்கில் 2018 மார்ச் 31 வரை ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அவகாசம் அளித்ததை, இன்று உச்சநீதிமன்றம் ஏற்றது. இதன் மூலம் பான், வங்கிக்கணக்கு, கைபேசி எண்ணுடன் ஆதாரை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு நலத் திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் இணைப்பை மார்ச் 31க்குள் செயல்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம், ஆதாரை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது. இப்போது ஆதார் வைத்துள்ளோர் மட்டும் வங்கி கணக்குகளில் அதை இணைத்துக்கொள்ளலாம். புதிதாக ஆதார் பெற வேண்டியவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
Existing Aadhaar card holders opening a new bank a/c have produce it before the bank.Non-aadhaar card holders opening a bank account have time till March 31, 2018 to produce Aadhaar card, says Supreem court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X