For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி கதவும் மூடப்பட்டது... பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவுக்கு சிக்கல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாலியல் பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவுக்கு சிக்கல்- வீடியோ

    டெல்லி: பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நித்தியானந்தா மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதோடு, விரைவாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

    நித்தியானந்தாவுக்கு எதிராக, ஆர்த்திராவ், லெனின், வினய் பரத்வாஜ், மூவரும் பலாத்கார வழக்கு தொடர்ந்தனர். 2010ல் சென்னை போலீசிடம் அவர்கள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து விசாரித்த கர்நாடக சிபிசிஐடி போலீசார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நித்தியானந்தா உட்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அடுத்தடுத்து தள்ளுபடி

    அடுத்தடுத்து தள்ளுபடி

    இதன்பிறகு வழக்கில் இருந்து விடுதலையாக நித்தியானந்தா தரப்பு அடுத்தடுத்து வழக்குகளை தாக்கல் செய்து வந்தது. ஆனால், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வரிசையாக நித்தியானந்தா மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டு வருகின்றன.

    கைவிட்டது ஹைகோர்ட்

    கைவிட்டது ஹைகோர்ட்

    பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் ராம்நகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடக ஹைகோர்ட்டில் நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, மே மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    உச்சநீதிமன்றம் விசாரணை

    உச்சநீதிமன்றம் விசாரணை

    இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நித்தியானந்தா. நீதிபதிகள் நாகேஸ்வரராவ், சந்தனகவுடர் அமர்வு இன்று இதை விசாரித்தது.
    நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கறிஞர் அஷ்வின் வைஷ் ஆஜராகி வாதம் முன் வைத்தார்.

    விரைந்து விசாரிக்க உத்தரவு

    விரைந்து விசாரிக்க உத்தரவு

    இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை விரைவாக விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் நித்தியானந்தாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    The Supreme Court has dismissed the Nithyananda petition demanding relif from the rape case and ordered to investigate quickly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X