For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி நீர் 10 நாட்களுக்குத் திறக்க கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக 15ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக விவசாயிகளை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சம்பா பயிரை காக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்குக் கர்நாடக மாநிலம் திறந்துவிட வேண்டிய 50.052 டி.எம்.சி. காவிரி நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

Supreme Court orderes Karnataka to release 1.35 Cauvery water

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி நீரின்றி காய்ந்து கிடக்கிறது. நீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட முன்வர வேண்டும் என்றும் இதுதொடர்பான அறிக்கையை கர்நாடக அரசு செப்டம்பர் 5ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க
வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நிலவும் கடும் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்ட கர்நாடக அரசு, 11,000 கன அடி நீரை நேற்று தமிழகத்துக்குத் திறந்துவிட்டுள்ளது. இது தமிழகத்துக்கு தரவேண்டிய, 50.052 டி.எம்.சி. தண்ணீரின் அளவில் மிகவும் சொற்பமானதாகும்.

கர்நாடகா ஆலோசனை

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மூத்த வழக்கறிஞர் மோகன் கடார்கி ஆகியோர் டெல்லிக்குச் சென்று கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நாரிமனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நீர் பற்றாக்குறை

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கர்நாடக அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையில் கர்நாடகா அணைகளில் நீரின் அளவு பற்றாக்குறையாக உள்ளது. எனவே தமிழகத்திற்கு 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லை என்று அந்த அறிக்கையில் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழு ஆய்வு

இது தொடர்பாக நமது ஒன்இந்தியா செய்தியாளரிடம் பேசிய கர்நாடகாவின் மூத்த வழக்கறிஞர் மோகன் கடார்கி, கர்நாடகாவில் உள்ள தண்ணீர் நிலைமையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறி உள்ளதாகவும் உண்மை கண்டறியும் குழு ஒன்றை, மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கர்நாடகாவிற்கு வந்து அணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்து அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கும் என்றும் காடர்கி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கர்நாடகாவிலும் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வட
கர்நாடகாவில் நல்ல மழை பெய்தாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் குறைவான அளவே மழை பெய்துள்ளதால் அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பதில் மனு

இதனிடையே சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசு காவிரியில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறந்து விட வேண்டிய 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கர்நாடகா அரசு இதுவரை 33 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவழை 28 சதவிகித அளவு
மட்டுமே குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இதனிடையே 50 டிஎம்சி தண்ணீர் திறக்கக் கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம்
தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் நிலை

தமிழக விவசாயிகளை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சம்பா பயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வழக்கு ஒத்திவைப்பு

காவிரி கண்காணிப்பு குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும் என்றும், தங்களுடைய கோரிக்கையை 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 3 நாட்களுக்குப் பிறகு காவிரி கண்காணிப்புக்குழு கர்நாடகா அரசிடம் பதிலை பெற வேண்டும் இரண்டு மாநில அரசுகளின் நிலையை அறிந்த 4வது நாளில் அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர். 50 டிஎம்சி தண்ணீர் திறக்கக்கோரிய வழக்கு விசாரணையை வரும்
16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

English summary
The Supreme Court today ordered Karnataka to release 1.35 TMC of Cauvery water to Tamil Nadu for ten days. The court also ordered the supervisory committee to decide on the issue relating to the release of water during this period of ten days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X